10 வயது சிறுவன் பெற்றோரின் காரை ஓட்டியதில் விபத்து ஏற்பட்டது

செவ்வாய்க்கிழமையன்று ஜாலான் அரோவானா 2, தமான் அரோவானா இம்பியானில், தனது பெற்றோரின் காரை ஓட்டிச் சென்ற 10 வயது சிறுவன் மற்ற இரண்டு வாகனங்களுடன் விபத்தில் சிக்கினான்.

இரவு 9.30 மணியளவில் சிறுவன் டொயோட்டா கொரோலாவை ஒன்பது வயது அண்டை வீட்டு நண்பருடன்  ஓட்டிச் சென்று சம்பவம் நடந்ததாகச் சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஹட்டா சே டின் தெரிவித்தார்.

“அவர்கள் அரோவானா இம்பியன் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தாமான் அரோவானா இம்பியானை நோக்கிப் பயணித்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தை அடைந்ததும், சிறுவன் ஓட்டிச் சென்ற கார் வளைவில் செல்லும்போது சறுக்கி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியது”.

“மோதலின் விளைவாக, வேன் அதன் முன் நிறுத்தப்பட்டிருந்த பெரோடுவா கன்சில் மீது மோதியது,” என்று அவர் நேற்று மாலை ஒரு செய்திக்குறிப்பில் கூறினார், இரண்டு சிறுவர்களும் காயமடையவில்லை என்று குறிப்பிட்டார்.

விபத்துகுறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரியை 016-4830853 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 39(1) மற்றும் 111, சாலை போக்குவரத்து விதிகள் 1959 விதி 10, குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1) ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.