மெர்டேகா மையத்தின் திட்ட இயக்குநர் இப்ராஹிம் சுஃபியன் கருத்துப்படி, இளைஞர்களிடையே அவர்களின் தற்போதைய வாய்ப்புகள்குறித்து அவநம்பிக்கை உணர்வு அதிகரித்து வருகிறது.
Merdeka Centre Youth Survey 2024 வெளியீட்டு விழாவில் பேசிய இப்ராஹிம் குறைந்த ஊதியம், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒட்டுமொத்த தரம்பற்றிய கவலைகளை எடுத்துரைத்தார்.
“அதிகமான விஷயங்கள் தவறாக நடக்கின்றன என்று அவர்கள் உணர்கிறார்கள், அவர்களின் கவலையின் பெரும்பகுதி பொருளாதார சூழ்நிலையிலிருந்து உருவாகிறது மற்றும் அவர்களின் ஊதியங்கள், உயரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு இல்லை,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், இப்ராஹிம் மேலும் கூறுகையில், இளைஞர்களின் வாழ்க்கை நிலைமைகள் எதிர்பார்த்த அளவுக்கு எதிர்மறையாக இல்லை.
இந்த ஆண்டு கணக்கெடுப்பில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்த 1,605 பேர் பதிலளித்தனர்.