குழந்தை இறப்பு விசாரணையில் செவிலியர் 7 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்

நேற்று 30 நாட்களே ஆன சிசு இறந்ததற்கு காரணமான அலட்சிய வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காகக் கோத்தாபாருவில் உள்ள சிறைச்சாலை பராமரிப்பு மையத்தில் உள்ள செவிலியர் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1) (a) இன் கீழ் போலீஸ் விசாரணையை எளிதாக்கும் வகையில், மாஜிஸ்திரேட் ரைஸ் இம்ரான் ஹமிட், வரும் செவ்வாய்க்கிழமை வரை காவலில் வைக்க உத்தரவைப் பிறப்பித்தார்.

நேற்று, கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ரோஸ்டி டவுட், சம்பவம்குறித்து போலிஸாருக்கு அறிக்கை கிடைத்ததை உறுதிப்படுத்தினார், 20 வயதுடைய பெண் மாலை 6 மணியளவில் பிடிபட்டதாகக் கூறினார்.

இந்தச் சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்தது, சிசுவின் பராமரிப்பிற்குப் பொறுப்பான செவிலியர் ஒருவரால் பாட்டில் பால் ஊட்டப்பட்ட பின்னர் குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அக்குழந்தை இறந்துவிட்டது.