குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸின் (GISBH) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நசிருதீன் அலி உட்பட 19 உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸார் ஏழு நாள் காவலில் வைக்க உத்தரவு.
25 முதல் 65 வயதுக்குட்பட்ட ஏழு பெண்கள் உட்பட 19 பேர் ஷா ஆலம் நீதிமன்றத்தில் நீதிபதி வான் நூரா நிசா ங்காதிரின் முன் பிற்பகல் 3 மணியளவில் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் செப்டம்பர் 25-ம் தேதி வரை காவலில் வைக்கப்படுவார்கள்.
அவர்கள் அனைவர் மீதும் குழந்தைகள் சட்டம் 2001, பிரிவு 32(a), தகவல் தொடர்பு மற்றும் இலக்கவியல் சட்டம் 1998 இன் பிரிவு 233 மற்றும் நபர்கள் கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு சட்டம் 2022 இன் பிரிவு 14 (திருத்தம்) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணைக்குப் பிறகு அவர்கள் ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தில் உள்ள சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 தொண்டு இல்லங்களில் இருந்து 402 குழந்தைகளை போலீசார் மீட்டனர்.
ஒரு உஸ்டாஸ் மற்றும் ஒரு விடுதி காவலர் உட்பட 171 பேரையும் அவர்கள் கைது செய்தனர்.
போலீஸாரின் கூற்றுப்படி, உஸ்தாஸ் மற்றும் விடுதி காப்பாளர் உட்பட 171 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். போலீசாரின் கூற்றுப்படி, விசாரணையில் குறைந்தது 13 சிறுவர்கள் ஓரின சேர்க்கை துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ்(GISBH), நிறுவனத்தை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தொண்டு இல்லங்களைச் செயல்படுத்துவதை மறுத்தது மற்றும் அதன் பராமரிப்பில் உள்ள குழந்தைகள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அல்லது பிறரை பாலியல் வன்கொடுமை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்தது.
எவ்வாறாயினும், கடந்த காலத்தில் அமைப்பினுள் ஒன்று அல்லது இரண்டு ஓரின சேர்க்கை துன்புறுத்தல்கள் நடந்ததாக நசிருதீன் ஒப்புக்கொண்டார்.
குளோபல் இக்வான் சர்வீசஸ் அண்ட் பிசினஸ் ஹோல்டிங்ஸின் (GISBH) நிறுவனத்தின் கோட்பாட்டின் மூலம் அதன் தொண்டு இல்லங்களில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு மாறுபட்ட போதனைகளை வழங்குவதாகக் கூறப்படுவதையும் அவர் மறுத்தார்.
நிறுவனத்துடன் தொடர்புடைய நான்கு பேர் மீது பாலியல் வன்கொடுமை உட்பட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.