பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால் ஆதரிக்கப்படும் ரிங்கிட் தொடர்ந்து வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் II அமீர் ஹம்சா அசிசான், ரிங்கிட்டின் தேவை அதிகரித்து வருவது உள்ளூர் நாணயத்தை மேலும் நிலைப்படுத்த உதவும் என்றார்.
“அரசாங்கம், அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் (government-linked companies), அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்கள் (government-linked investment companies) மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மூலம், எந்தச் சூழ்நிலையிலும் ரிங்கிட்டை உறுதிப்படுத்த முடியும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் சுங்கத் திணைக்களத்திற்கான 40 புதிய யூனிட் பேக்கேஜ் ஸ்கேனர்களை வழங்கும் நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நேர்மறையான பொருளாதார முன்னேற்றங்கள், அதிகரித்து வரும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அமெரிக்காவின் வட்டி விகிதங்களின் நகர்வுகள் காரணமாகச் சமீபத்தில் ரிங்கிட்டின் செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அமீர் மேலும் கூறினார்.
” ரிங்கிட் இன்னும் வலுப்பெற்று வருகிறது, படிப்படியாக அதன் உண்மையான சமநிலையை கண்டுபிடித்து வருகிறது,” என்று அவர் கூறினார், பிராந்தியத்தில் உள்ள பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக உள்ளூர் நாணயமும் வலுப்பெற்றுள்ளது.
இன்று, ரிங்கிட் அமெரிக்க டாலருக்கு எதிராக 4.12 ஆக முடிவடைந்தது, இது உலகளவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயங்களில் ஒன்றாக வெளிப்படுகிறது.