அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் (UNGA 79) 79 வது அமர்வில் மலேசிய பிரதிநிதிகள், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையையின்போது வெளிநடப்பு போராட்டத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்தது.
வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஹசன், சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் ஐ.நாப்பாதுகாப்பு கவுன்சிலின் முடிவுகளின் அடிப்படையில் பாலஸ்தீன தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகள் இந்த வெளிநடப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதை குறிபிட்டதக நியூஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“நெதன்யாகு தனது உரையைத் தொடங்க மேடையை நெருங்கியபோது, எல்லோரும் எழுந்து வெளியேறினர்.”
“நாங்கள், மலேசிய பிரதிநிதிகள் கூடச் சபையை விட்டு வெளியேறினோம்,” என்று முகமட் NST மேற்கோள் காட்டினார்.
“nternational Court of Justice யின் முடிவு அல்லது ‘ஆலோசனை கருத்தை’ ஆதரித நாடுகள் சபையை விட்டு வெளியேறினார். சபை காலியாகக் கணபட்டது.”
“இருப்பினும், வழக்கம்போல், நெதன்யாகு ஐ. நா மற்றும் அதன் முகமைகளின் பங்கை ஆணவத்துடனும் பெருமையுடனும் குறைத்து மதிப்பிட்டார், ஐ. நா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என்று சொல்வது போல்,” என்று முகமது கூறினார்.
இதற்கிடையில், இந்தோனேசிய செய்தி நிறுவனமான அன்டாரா (Antara) இந்தோனேசியாவின் பிரதிநிதியான வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடி மற்றும் அவர் குழுவும் மலேசியா மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), அரபு லீக் மற்றும் கூட்டுசேரா இயக்கதின் (NAM) உருபினார்களான குவைத், ஈரான், பாகிஸ்தான் மற்றும் கியூபா உள்ளிட்ட பிற நாடுகளுடன் வெளிநடபில் இணைததாகக் கூறியது.
நம் உள்ளூர் நேரப்படி செப்டம்பர் 27 அன்று ஐ.நாச்சபையில் உரையாற்ற நெதன்யாகு மேடையை நெருங்கியபோது பிரதிநிதிகள் தங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறினர்.
பிரதிநிதிகள் தங்கள் இடங்களைக் காலி செய்ததால் சபை பரபரப்பானது. இந்த நிலை சட்டமன்றத் தலைவர் பிலெமோன் யாங் உத்தரவிடும் அளவிருக்கு சென்றதாக அறிக்கை கூறுகிறது.