பாலஸ்தீன ஆதரவு பேரணியில் நூற்றுக்கணக்கானோர் அமெரிக்க தூதரகத்திற்கு பேரணியாகச் சென்றனர்

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பின் ஓராண்டு நிறைவை ஒட்டி இன்று கோலாலம்பூரில் உள்ள லெம்பகா தபுங் ஹாஜி தலைமையகத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, அமெரிக்க தூதரகத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் செல்வதற்கு முன், பங்கேற்பாளர்கள் கட்டிடத்திற்கு வெளியே கூடினர்.

பேரணியில் அமானா தலைவர் முகமது சாபு கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

முகமது தனது உரையில், அரபு நாடுகள் அதைச் செய்யத் தவறியதால், உலக அமைதிக்கான புதிய சூத்திரத்தை வகுக்கப் பிரதமர் அன்வார் இப்ராகிமை வலியுறுத்தினார்.

“ஐக்கிய நாடுகள் சபை இனி பயனில்லை; அது விவாதங்களுக்கான இடமாக மாறிவிட்டது, வேறொன்றுமில்லை.

“எனவே, உலக அமைதி மற்றும் உலகில் நீதிக்கான புதிய சூத்திரத்தை வகுக்குமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் போராட்டக்காரர்களிடம் கூறினார்.

இனப்படுகொலையை எதிர்கொள்ளும் பாலஸ்தீனியர்களின் அவலநிலையை புறக்கணிக்க அரபு நாடுகள் தெரிவுசெய்தது “துரதிர்ஷ்டவசமானது” என்று முகமட் கூறினார்.

அமெரிக்க தூதரகத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் அமைதியுடன் கூடியிருந்தனர்.

இருப்பினும், தூதரக கட்டிடத்திலிருந்து சுமார் 200 மீத்தொலைவில் அணிவகுப்பை தொடர விடாமல் அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர், மேலும் அவர்கள் உத்தரவுக்குக் கட்டுப்பட்டனர்.

அமானா தலைவர் முகமது சாபு (நடுவில்)

பிற்பகல் 3.15 மணியளவில் எந்தவித அசம்பாவிதமுமின்றி போராட்டம் கலைந்தது.

மேலும் PAS இளைஞர் தகவல் தலைவர் கைருல் நட்சிர் ஹெல்மி மற்றும் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் தியான் சுவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.