புன்சாக் ஆலம் அருகே தண்ணீர் தேக்க அணை உடைந்ததை அடுத்து திடீர் வெள்ளம்

புயலுக்கு மத்தியில் தண்ணீர் தேக்க அணை உடைந்ததையடுத்து, புன்சாக் ஆலம் அருகே ஒரு சுற்றுப்புறத்தில் முழங்கால் உயரம் வரை வெள்ளம் ஏற்பட்டது.

கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் பதிவாகியுள்ளது, பஹாங்கும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று சிலாங்கூர், புன்சாக் ஆலம் அருகே முழங்கால் உயரத் திடீர் வெள்ளம் ஏற்பட்டது, பின்னர் பெய்த மழையின் மத்தியில் ஒரு நீர்த் தேக்கக் கட்டின் சுவர் உடைந்து, தண்ணீர் அக்கம்பக்கத்தில் புகுந்தது.

தாமான் ஶ்ரீஆலாம் சுற்றுப்புறத்திற்கு அடுத்ததாக இந்தப் பண்ட் அமைந்துள்ளது, மேலும் சமூக ஊடகங்களிலிருந்து வந்த படங்கள், தேக்க அணை நேரடியாக எதிர்கொள்ளும் வீடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் காட்டியது.

அருகில் உள்ள மலைப்பாங்கிலும் வெள்ளம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கூறியது, ஆனால் சில குடியிருப்பாளர்கள் சவுஜானா உத்தாமாவில் உள்ள வெள்ளப் பாதுகாப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டனர்.

எத்தனை குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பருவமழை கிழக்கு கடற்கரையில் வெள்ளம்

மற்றொரு சுற்று வெள்ளம் கிளந்தான் மற்றும் திரங்கானுவைத் தாக்கியுள்ளது, கிழக்கு கடற்கரையில் பருவமழை பெய்வதால் பஹாங்கும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் இணையதளம் 480 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.