சபாவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சீன சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு சபாவின் பெனாம்பாங்கில் சாலையைக் கடக்கும்போது சீன சுற்றுலாப் பயணி ஒருவர் மீது மோதியதாக நம்பப்படும் மோட்டார் இருசக்கர ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஜனவரி 15 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் புட்டாடன் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் இந்த சம்பவம் நடந்ததாக பெனாம்பாங் காவல்துறைத் தலைவர் சமி நியூட்டன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் கோத்தா கினாபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் தலையில் ஏற்பட்ட காயங்களால் பின்னர் இறந்தார் என்று சபா வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

“சம்பந்தப்பட்ட இருசக்கர ஓட்டுநர் எங்கும் காணப்படவில்லை. போலீசார் அந்த நபரைத் தேடி வருகின்றனர்,” என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

விசாரணையில் உதவ முன்வர பொது மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

-fmt