அரசாணை தொடர்பாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீது தெங்கு ரசாலி ஹம்சா சுமத்திய குற்றச்சாட்டு பிகேஆர் தலைவர்களிடையே கடும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.
87 வயதான அம்னோ ரசாலி தனது “பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற” கூற்றுக்களுக்கு பிரதமரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பஹ்மி ஜைனோல் கோரினார்.
நஜிப்பின் கருணை மனு தொடர்பான அன்வாரின் முந்தைய அறிக்கையை மேற்கோள் காட்டிய பஹ்மி,: “பிரதமரின் விளக்கம், மாட்சிமை மிக்க யாங் டி-பெர்துவான் அகோங்கின் ஞானம், அரச நிறுவனம் மற்றும் நீதித்துறையின் நேர்மை பற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தீவிர கூற்றுக்களுக்கும் முற்றிலுமாக பதிலளித்துள்ளது.”
இருப்பினும், கு லி என்றும் அழைக்கப்படும் தெங்கு ரசாலி (மேலே) அன்வார் ஆவணங்களை மறைத்து நீதியைத் தடுப்பதாக குற்றம் சாட்டியதற்கு பிகேஆர் உச்ச மன்ற உறுப்பினர் வருத்தம் தெரிவித்தார்.
குற்றச்சாட்டை மறுத்த பஹ்மி “இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு, ஏனெனில் உண்மைகளை மறைப்பதில் அல்லது எந்தவொரு முக்கியமான அரசாங்க ஆவணங்களையும் மறைப்பதில் யாரும் ஈடுபடவில்லை..
“இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு முன்பு தற்போதைய நிகழ்வுகளைப் பின்பற்றுவதில் குவா முசாங் தெங்கு ரசாலி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்று பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
நேற்று, முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க உத்தரவிட்ட அரச பிற்சேர்க்கையை அரசாங்கம் மறைத்துவிட்டதாக தெங்கு ரசாலியின் குவா முசாங் அம்னோ பிரிவு கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமராக, அன்வார் மாமன்னர் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருப்பதற்கான சத்தியப்பிரமாணத்திற்குக் கட்டுப்பட்டவர் என்று தெங்கு ரசாலி கூறினார்.
எனவே, மாமன்னரின் எந்தவொரு மீறலும், மறைத்தலும் அல்லது ஆணையை மறுப்பதும் தேசத்துரோகச் செயலாகும் என்று அவர் சாடியிருந்தார்.
இந்த பிற்சேர்க்கை குறித்த நீடித்த விவாதத்திற்குப் பிறகு, ஜனவரி 11 அன்று அன்வார் அது உள்லது என ஒப்புக்கொண்டார், ஆனால் அது அந்த நேரத்தில் அட்டர்னி ஜெனரலுக்கு (ஏஜி) நேரடியாக அனுப்பப்பட்டதாக விளக்கினார்.