சிலாங்கூர் செப்பாங்கில் உள்ள கோத்தா வாரிசன் ஷாப்பிங் மாலின் நுழைவாயிலில் தனது மனைவியை அறைந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவரின் சகோதரர் போலீசில் புகார் அளித்ததாகவும், அது வைரலாகி வரும் வீடியோவில் பதிவாகியுள்ளதாகவும் செப்பாங் காவல்துறைத் தலைவர் நோர்ஹிசாம் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் தனது 35 வயது சகோதரி என்பதை புகார்தாரர் உறுதிப்படுத்தினார். பாதிக்கப்பட்டவரை தாக்கிய சந்தேக நபர் 50 வயதுடைய அவரது கணவர்” என்று அவர் கூறினார்
சாட்சிகளிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருவதாக நோர்ஹிசாம் கூறினார்.
காயம் ஏற்படுத்தியதற்காகவும், குடும்ப வன்முறைக்காகவும் வழக்கு விசாரிக்கப்படுகிறது.
வீடியோவில், அந்தப் பெண் மாலில் இருந்து வெளியே நடந்து செல்வதையும், சந்தேக நபர் , அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்து, இருவரும் மாலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவளிடம் கோபமாக ஏதோ சொல்வதும் பதிவாகியுள்ளது.