மின்னணு சிகரெட் (vape) கடத்தல் சிண்டிகேட்கள் உள்ளதா என்பதைக் கண்டறிய MACC உளவுத்துறை நடவடிக்கைகளைத் தீவிரமாக நடத்தி வருகிறது.
MACC துணைத் தலைமை ஆணையர் (செயல்பாடுகள்) அஹ்மத் குசைரி யஹாயா மற்ற நுழைவுப் புள்ளிகளில் சிண்டிகேட்டுகள் செயல்படுவதற்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை.
ஓப்ஸ் ஏர்வேஸ்(Ops Airways) மூலம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) கார்கோ ஹப்பில் வேப் கடத்தல் கும்பலை அகற்றுவதில் கமிஷன் சமீபத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.
“தற்போது புதிய கைதுகள் எதுவும் இல்லை. இருப்பினும், சில (ராயல் மலேசியன்) சுங்க துறை அதிகாரிகள் MACC இன் ரேடாரில் உள்ளனர்.
“சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது,” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.
சமீபத்தில், MACC, KLIA சரக்கு மையத்தில், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆறு சுங்க அதிகாரிகள் உட்பட 14 நபர்களைக் கைது செய்தபின்னர், ஒரு வேப் கடத்தல் சிண்டிகேட்டை முறியடித்தது.
ஓப்ஸ் ஏர்வேஸ் மூலம் சிண்டிகேட் கண்டுபிடிக்கப்பட்டது, இது KLIA மற்றும் புத்ராஜெயாவைச் சுற்றியுள்ள சோதனைகளில் 20 முதல் 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண் சந்தேக நபர்களையும் கைது செய்ய வழிவகுத்தது. இந்தக் கடத்தல் நடவடிக்கையால் நாட்டிற்கு 8 மில்லியன் ரிங்கிட் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.