முஸ்லிம்கள், இறுதிச் சடங்குகள் உட்பட முஸ்லிம் அல்லாத நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை மஇகா துணைத் தலைவர் எம்.சரவணன் விமர்சித்துள்ளார்.
மதங்களுக்கு இடையேயான நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்று பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் நயிம் மொக்தார் கூறியதைத் தொடர்ந்து இது குறிப்பாக நிகழ்ந்துள்ளது.
“ஒவ்வொரு முறை முஸ்லிம் அல்லாதவரின் இறுதிச் சடங்கு நடைபெறும் போதும், ஒரு முஸ்லிம் நண்பர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒப்புதல் பெற வேண்டும் என்று அமைச்சர் சொல்கிறாரா?”
“யாராவது இறந்தால், இறுதி மரியாதை செலுத்த விரும்பும் முஸ்லிம்களை அனுமதிப்பதற்கு முன்பு நாம் ஜாகிமின் (இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை) அனுமதியைக் கேட்க வேண்டுமா?”
“கிள்ளானில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் தகன மேடைக்கு அடுத்ததாக முஸ்லிம் கல்லறை இருப்பதால், நகராட்சி மன்ற கட்டிடத்திற்கு வெளியே அனைத்து உடல்களையும் எரிக்க வேண்டுமா?” என்று சரவணன் இன்று ஒரு அறிக்கையில் கேட்டார்.
முஸ்லிம் அல்லாதவர்கள் தங்கள் முஸ்லிம் நண்பர்களைத் திருமணத்திற்கு அழைக்க விரும்பினால் ஜாக்கிமின் ஒப்புதல் தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.