தம்பதியினரை துப்பாக்கியால் சுட்ட புலி மனிதன் கைது

ஜோகூரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு “புலி மனிதன்”, என்று அழைக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிம்பாங் ரெங்காமின் கம்போங் புக்கிட் பத்து மச்சாப்பில் உள்ள தங்கள் வீட்டின் நுழைவாயிலில் பாதிக்கப்பட்டவரும் அவரது கணவரும் நின்று கொண்டிருந்தபோது, ​​மூன்று ஆண்கள் அவர்களை அணுகியதாக குளுவாங் காவல்துறைத் தலைவர் பஹ்ரின் நோ கூறினார்.

“சந்தேக நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டவரை நோக்கி நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்னர் சந்தேக நபர்கள் மேலும் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்,” என்று சினார் ஹரியனிடம் கூறினார்.

ஆறு துப்பாக்கிச் சூடுகள் வீட்டின் கதவு சட்டத்தையும் ஒரு மேஜையையும் தாக்கியதால் தம்பதியினர் காயமடையவில்லை என்று பஹ்ரின் கூறினார்.

“புலி மனிதன்” என்று அழைக்கப்படும் சந்தேக நபர் நேற்று மாலை 7 மணிக்கு சிம்பாங் ரெங்காமில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

வேலையில்லாத அந்த நபருக்கு 32 வயது என்றும், அவர் மீது 27 முந்தைய வழக்குகள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், அதில் 18 போதைப்பொருள் தொடர்பான குற்றங்களும் அடங்கும் என்றும் பஹ்ரின் கூறினார்.

அதோடு  அவர் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளுக்கு ஆளாகியுள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டபோது துப்பாக்கியை பயன்படுத்தியதற்காக துப்பாக்கிச் பயன்படுத்துதல் (கடுமையான தண்டனைகள்) சட்டம் 1971 இன் பிரிவு 3 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, இந்தச் சட்டத்தின் கீழ்  மரண தண்டனைதான் விதிக்கப்படும்.

அதோடு கொலை முயற்சி குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 இன் கீழும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, இதில் தண்டனை விதிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.