எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே சட்டத்தைப் புறக்கணிக்கின்றன – பிரதமர்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சம்பந்தப்பட்ட அரச உட்பிரிவுப் பிரச்சினையை எதிர்கட்சி கொண்டு வந்தபின்னர் எதிர்க்கட்சிகள் சட்டத்தை அவமதிப்பதாகப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.

இந்தப் பிரச்சினை நாட்டில் முதலீடுகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதா என்று எதிர்க்கட்சிகள் அவரிடம் விளக்கம் கேட்டதை அடுத்து இது வந்துள்ளது.

“இதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்? வழக்கு (அரச சேர்க்கை- addendum) இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற செயல்முறை முடிந்ததும் நான் பதிலளிப்பேன் என்று நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளேன். எதிர்க்கட்சித் தலைவர் வருவாரா இல்லையா என்று பார்ப்போம்.

“நீங்கள் (எதிர்க்கட்சி)  விரும்பியபடி கத்தலாம், ஆனால் எனக்கு உண்மைகள் தெரியும். மாமன்னரின்  நிலைப்பாட்டைத் தொடும்படி என்னிடம் வினவ … நான் செய்ய மாட்டேன், ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை… நீங்கள் சரிபார்க்கலாம். நான் ஆட்சியாளர்களுடன் கலந்தாலோசித்துள்ளேன்.

“கிளாந்தன் ஆட்சியாளரிடம் சென்று கேளுங்கள். . நீதிமன்ற செயல்முறை முடிந்த பிறகு அனுமதித்தால், அதை விளக்குவேன் என்று நான் உறுதியளித்துள்ளேன், “என்று இன்று நாடாளுமன்றத்தில் பிரதமரின் கேள்வி நேரத்தின்போது அன்வார் கூறினார்.