சார்ல்ஸ் சந்தியாகோ– அன்மையில், அன்வார் துன் மகாதீரின் மகன்களிடம், அவர்களின் சொத்துக்கான மூலத்தை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்கள் அதை திருப்பித் தர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
ஆனால் இது ஒரு குடும்பத்தைப் பற்றியதாகவோ அல்லது தெரு போராட்ட பேரணியின் விளைவாகவோ இருக்கக்கூடாது. அனைத்து உயரடுக்குகளையும் கண்காணிக்க உதவும் ஒரு ஆணையாக இருக்க வேண்டும்.
இங்கிலாந்து அமலாக்க நிறுவனங்கள் ஒரு வருடத்தில் Unexplained wealth Order (UWO) அதாவது £62.9 மில்லியன் கணக்குகாட்ட ப்பபட இயலாத சொத்துக்களை சிவில் நடவடிக்கைகள் மூலம் மீட்டெடுத்தன. மலேசியாவும் அதையே செய்ய முடியும்.
நீதிமன்றத்தில் பல தசாப்தங்களாக வழக்குகளை இழுத்தடிக்காமல் திருடப்பட்ட செல்வத்தை மீட்டெடுக்க முடியும்.
மலேசியா வெறும் 5 ஆண்டுகளில் ஊழலால் RM277 பில்லியனை இழந்தது, அது மோசடி, கொள்முதல் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நடைமுறை வழி ஆண்டுக்கு RM55 பில்லியனாகும்.
இந்தப் பணம் நமது பள்ளிகள், மருத்துவமனைகள், உணவு உதவிக்கு இப்படி பல வகைகளில் நிதியுதவி அளிக்க முடியும்.
நமது நாட்டின் வளம் சுரண்டப்பட்டு வருவதை நம்மால் உணர முடிகிறது.
சாதாரண மலேசியர்கள் கடன் உதவித்தொகைகளுக்காக தங்கள் வருமானத்தை நிரூபிக்க வேண்டும். ஆனால் மாளிகையில் வாழ்வோரும் பணம் படைத்தவர்களும் அரிதாகவே அதே ஆய்வுக்கு உட்படுகிறார்கள். இது யாருக்கு என்ற போட்டி பற்றியது அல்ல.
எவ்வளவு சக்திவாய்ந்தவராக இருந்தாலும் அவர்கள் நீதிக்கும் நியாயதிற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நிலைநாட்ட ஒரு அமைப்பு நமக்குத் தேவை.
விவரிக்கப்படாத செல்வம், அதிகாரத்தில் இருப்பவர்களைப் பொறுத்து இருக்கக்கூடாது. மலேசியாவிற்கு ஒரு தெளிவான விளக்கச் சட்டம் தேவை: தனிநபர்கள் தங்கள் பெறும் வருமானத்திற்கு அப்பால் சொத்துக்களை எவ்வாறு பெற்றனர் என்பதை நிரூபிக்க வேண்டிய தெளிவான, சட்டப்பூர்வ நடைமுறை இல்லையென்றால் நீதி என்பதும் ஒரு வெறும் அரசியல்தான் என்றாகிவிடும்.

























