கோலா சிலாங்கூர் கோயிலுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது

ஞாயிற்றுக்கிழமை கோலா சிலாங்கூரில் உள்ள ஒரு கோவிலில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதற்காக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் காணொளி பரவியதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் புகார் அளிக்கப்பட்டதாக கோலா சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அசாஹருதீன் தாஜுடின் தெரிவித்தார்.

காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் பெஸ்தாரி ஜெயாவில் உள்ள லடாங் புக்கிட் பதோங் கோவிலில் நடந்தது.

“கோயிலில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சந்தேக நபர் வானத்தை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

“சந்தேக நபர் நேற்று இரவு 8 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் இன்று முதல் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுளார்.

துப்பாக்கியை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்தியதற்காக வழக்கு விசாரிக்கப்படுகிறது.

 

 

-fmt