ப. இராமசாமி உரிமை தலைவர் –
கெடா மாநிலக் கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர், பேராசிரியர் டாக்டர் நைம் ஹில்மான் அப்துல்லா, மலேசியாவின் ஐந்து முன்னணி பொது பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை 21.3 சதவீதம் என வெளிப்படுத்தியுள்ளார்—இது சீன மற்றும் இந்திய மாணவர் சேர்க்கையை ஒன்றாகக் கூட்டிய அளவை விடவும் அதிகமாகும்.
சீன மாணவர்கள் வெறும் 13.5 சதவீதமாகவும், இந்திய மாணவர்கள் அதைவிடக் குறைவாகவும் உள்ளனர். குறிப்பிடப்பட்ட பல்கலைக்கழகங்கள்: மலாயா பல்கலைக்கழகம் (UM), மலேசியா அறிவியல் பல்கலைக்கழகம் (USM), மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM), மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (UPM), தொழில்நுட்ப மலேசிய பல்கலைக்கழகம் (UTM) போன்றவைகளில் உள்ளனர்.
முன்னாள் வட மலேசிய பல்கலைக்கழக (UUM) துணை வேந்தராகிய பேராசிரியர் நைம் ஹில்மான், 20 பொது பல்கலைக்கழகங்களில் மொத்தம் 611,698 மாணவர்களில் 53,322 பேர் (8.72 சதவீதம்) வெளிநாட்டவர்கள் எனவும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு பேட்டியில், இந்த ஆட்சிக்குழு உறுப்பினர் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை உள்ளூர் மாணவர்களுக்கு அநியாயமாக உள்ளது என்றும் வாதிட்டுள்ளார். ஆண்டுதோறும் பல திறமையான மலேசிய மாணவர்கள் பொது பல்கலைக்கழகங்களில் இடமின்றி தவிக்கின்றனர் அல்லது விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெற முடியாமல் தவிக்கின்றனர். சிலர் பெரும் கட்டணச் சுமையுடன் தனியார் பல்கலைக்கழகங்களில் சேர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
அதிகபட்சம் பத்துமடங்கு உயர்ந்த கட்டணங்களை விதிக்கும் எனப்படும் “மாற்று சேர்க்கை முறை” சிறிதளவு கூட நிவாரணம் அளிக்கவில்லை. வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது கொள்கையில் தவறல்ல என்றாலும், வருடத்திற்கு 5,000-க்கும் மேற்பட்ட சேர்க்கை மிகையாகவும் உள்ளூர் மாணவர்களுக்கு பாதகமாகவும் உள்ளது.
சந்தேகமே இல்லை, வெளிநாட்டு மாணவர் சேர்க்கை குறிப்பாக நமது நாட்டின் சீன மற்றும் இந்திய மாணவர்களின் இடத்தைபிடித்துவிட்டது.
எந்த நாடும் வரி செலுத்தும் குடிமக்களுக்கு பதிலாக தங்களது சொந்தப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டவர்களுக்கு இடம் கொடுக்க அனுமதிப்பதில்லை.
மலேசியாவின் உயர் கல்வி முறையில் ஏதோ தீவிரமான தவறு இருக்கிறது. உயர் கல்வி அமைச்சர் சாம்ப்ரி அப்துல் காதீர் இந்தக் கவலைக்கிடமான நிகழ்வை விளக்க முடியுமா? கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படாவிட்டால், உள்ளூர் மாணவர்கள் பலியாட்களாக மாறும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, இன அடிப்படையிலான சாய்வு கொண்ட சேர்க்கை முறை சீன மற்றும் இந்திய மாணவர்களுக்கு அநீதி செய்கிறது.
இனம் அடிப்படையிலான முன்னுரிமை கொள்கை ஏற்கத்தக்கதாக இருந்தாலும், அது அனைத்து சமூகங்களுக்கும் நியாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.
இன வேறுபாடு “முன்னுரிமை நடவடிக்கை” என்ற பெயரில் தொடராமல், உண்மையான திறனாதார முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது.
பழமையான இன அடிப்படையிலான முறைமைக்கு “திறனாதார முறை” என்று அழைப்பது தவறாது, உண்மையான மலேசிய குடிமக்களின் புத்திசாலித்தனத்திற்கு அவமரியாதையாகும்.
நமது நிலைமை – உள்ளூர் மாணவர்கள் தவிக்க வெளிநாட்டவர்களுக்கு இடம் கொடுப்பது, “காட்டிலுள்ள குரங்கிற்கு பாலூட்டுறார்கள், ஆனால் வீட்டில் உள்ள பிள்ளை பசியால் மடிகிறது.” என்பது காட்டும் மிகச் சரியான மலாய் பழமொழி,

























