
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 40 பேர் மாண்டனர்….
திரு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர்கள் மீது மாநிலக் காவல்துறையினர் குற்றவியல் வழக்கைத் தொடுத்துள்ளனர்.
கரூரில் நடந்த கூட்டத்தில் சுமார் 27,000 பேர் திரண்டனர்…
பலர் மயங்கி விழுந்தனர்.
கூட்டத்துக்கு இடையே அவசர மருத்துவ வாகனங்கள் சென்றன…

நடிகர் விஜய்யைக் காணச் சென்றவர்களிடையே நெரிசல் ஏற்பட்டது…
காயமுற்றோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்…

பாதிக்கப்பட்டோரின் அன்புக்குரியவர்கள் அங்குக் கூடினர்.

சம்பவ இடத்தில் பொதுமக்களின் செருப்புகள் உள்ளிட்ட உடைமைகள் காணப்பட்டன.



காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



























