இராகவன் கருப்பையா – நம் நாட்டின் தலைச்சிறந்த பெண் கவிஞர்களில் ஒருவரான மலர்விழி தி.ப.செழியனின் ‘நிலவாற்றுப்படை’ எனும் கவிதைத் தொகுப்பு நூல், நாளை சனிக்கிழமை 22ஆம் தேதியன்று தலைநகரில் வெளியீடு காணவிருக்கிறது.
காலஞ்சென்ற, புகழ்பெற்றக் கவிஞர் தி.ப.செழியனின் புதல்வியான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கவிதைகளை புனைந்து வருகிறார்.
தற்போது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உதவித் தலைவராக இருக்கும் மலர்விழியின் படைப்புகள் உள்நாட்டில் மட்டுமின்றி தமிழகத்திலும் கூட பிரசித்திப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நாட்டின் தமிழ் எழுத்துத்றையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தனது தந்தையின் கடந்த கால படைப்புகளுக்கு ஈடாக கோலோச்சி வரும் இவருக்கு இந்த புத்தகம் முதல் முயற்சியாகும்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாலம்பூர் ம.இ.கா. தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணி தொடங்கி விமர்சையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

























