நெகிரி செம்பிலானில் உள்ள லெங்கெங்கில் உள்ள ஒரு கிளப்ஹவுஸ் நீச்சல் குளத்தில், மழலையர் பள்ளி பரிசளிப்பு விழாவின் போது, ஐந்து வயது சிறுமி நீரில் மூழ்கி இறந்தார்.
நூர் தியா அஸ்ஸாலியா நூர் முகமது என்ற சிறுமி, மதியம் 12.15 மணியளவில் தனது தோழிகளுடன் நீந்திக் கொண்டிருந்தபோது, ” சிறுமி திடீரென்று தன் தந்தையின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டார்” என்று அவர் தெரிவித்தாகமாநில காவல்துறைத் தலைவர் அல்சாப்னி அகமது தெரிவித்தார்.
தந்தை தனது மகளை குளத்தில் அசையாமல் இருப்பதைக் கண்டதாகவும், பொதுமக்கள் சிறுமிக்கு செய்ய உதவியதாகவும் அல்சாப்னி தெரிவித்தார்.
சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு ஒரு மருத்துவர் அவர் இறப்பை உறுதிப்படுத்தினார். பிரேத பரிசோதனை நடைபெறும் என்று மாநில காவல்துறைத் தலைவர் அல்சாப்னி அகமது தெரிவித்தார்.
-fmt

























