குவாந்தனின் சில பகுதிகளில் வெள்ளம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது

தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து குவாந்தனின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட துணை மின்நிலையங்களில் SMK ஸ்ரீ டமாய், ஸ்ரீ டமாய் செஜாதேரா 1 மற்றும் 2, லோரோங் ஸ்ரீ டமாய் ஜெயா 9, ஜாலான் ஸ்ரீ டமாய் ஜெயா 1/13, மற்றும் ஜாலான் மாட் கிலாவ் ஆகியவை அடங்கும் என்று தெனாகா நேசனல் பெர்ஹாட்(TNB) அறிவித்துள்ளது.

“உள்ளூர் நுகர்வோரின் பாதுகாப்பிற்காகவே மின் தடை” என்று அது ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

பிளக்குகள் அல்லது பவர் சாக்கெட்டுகள் ஈரமாகவோ அல்லது அழுக்காகவோ இருந்தால் மின் சாதனங்களை இயக்க வேண்டாம் என்றும் தெனாகா நேசனல் பெர்ஹாட்(TNB) பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இன்று நண்பகல் நிலவரப்படி, பகாங்கில் உள்ள குவாந்தான், மாறன் மற்றும் ரோம்பின் முழுவதும் உள்ள 29 நிவாரண மையங்களில் சுமார் 2,860 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

 

 

-fmt