சுமார் ரிம 5 மில்லியன் லஞ்சம் மற்றும் ஒரு லம்போர்கினி சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஒருவரின் வாக்குமூலத்தை MACC பதிவு செய்துள்ளது.
பெரிட்டா ஹரியன் அறிக்கையின்படி, லஞ்சம் இரண்டு வழக்குகளுடன் தொடர்புடையது: ஒரு விளம்பரப் பலகை திட்டம் மற்றும் கோலாலம்பூரில் நில பரிமாற்றம்.
அந்த லம்போர்கினி காரை ஒரு விளம்பரப் பலகை தயாரிப்பு நிறுவனம் அரசியல்வாதிக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
MACC தகவலின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஒரு டெவலப்பரிடமிருந்து ரிம 5 மில்லியன் பெற்றதாக ஒரு வட்டாரம் மேற்கோள் காட்டியது.
“முன்னாள் அமைச்சர் இன்று காலைப் புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜரானார், மேலும் விசாரணைகள் இப்போது சொகுசு காருக்கான பணத்திற்கான மூலத்தைக் கண்டுபிடித்து வருகின்றன”.
“நில வழக்கைப் பொறுத்தவரை, சூராவ் கட்டுவதற்காக முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலம் ஒரு பினாமி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் கண்டறிந்தன,” என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
இரண்டு வழக்குகளின் விசாரணையிலும் அரசு ஊழியர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் உட்பட 16 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டதாக அந்த வட்டாரம் மேலும் கூறியது.
MACC தலைமை ஆணையர் அசாம் பாக்கி, மலாய் மொழி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், MACC சட்டம் 2009 இன் பிரிவு 16 இன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். லஞ்சம் பெறும் எந்தவொரு நபரும் குற்றம் செய்ததாகக் கூறுகிறது.
இந்தக் குற்றத்திற்கு அதே சட்டத்தின் பிரிவு 24-ன் கீழ் தண்டனை விதிக்கப்படும், 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், லஞ்சத்தின் மதிப்பைவிட ஐந்து மடங்கு அல்லது ரிம 10,000-க்கு மிகாமல் அபராதமும், இதில் எது அதிகமோ அது விதிக்கப்படும்.
கேள்விக்குரிய அரசியல்வாதி கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு அமைச்சராகப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் பதவியில் இருந்தபோது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் புகார்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிமீது ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தனது கவனத்தைத் திருப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிக்கையின்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்மீது நீதிமன்றத்தில் பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

























