என்எப்சி கிரடிட் கார்டுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை அதன் தலைமை நிர்வாக அதிகாரி மறுக்கிறார்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வான் ஸாஹினுர் இஸ்ரான் சாலே, தாமும் தமது மற்ற குடும்ப உறுப்பினர்களும் நிறுவனத்தின் கிரடிட் கார்டுகளை தனிப்பட்ட சொந்தக்  காரணங்களுக்காக பயன்படுத்தியதாக பிகேஆர் குற்றம் சாட்டியுள்ளதை மறுத்துள்ளார்.

“நிறுவனச் செலவுகளுக்கு மட்டுமே கிரடிட் கார்டு வழியாக பணம் செலுத்தப்பட்டது.  ஏமாற்றுவதற்கு பிகேஆர் மேற்கொண்டுள்ள முயற்சி அனைவருடைய விவேகத்தையும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது,” என தமது டிவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி இன்று வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கு இஸ்ரான் பதில் அளித்தார்.

“பிகேஆர் எப்போதும் அவதூறான  அறிக்கைகளை வெளியிடுகிறது. இதுதான் அரசியல். நாங்கள் எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்போம்.”

மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் 27 வயது புதல்வரான இஸ்ரானும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இதர மூவரும் 2009ம் ஆண்டு என்எப்சி கணக்கில் உள்ள கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி மொத்தம் 593,500 ரிங்கிட் செலவு செய்துள்ளதாக ராபிஸி கூறிக் கொண்டிருந்தார்.

ஆனால் செலவு விவரங்களை ராபிஸி வெளியிடவில்லை.

TAGS: