காவல்துறை தரப்பில் 38 வயதான பாதிக்கப்பட்டவர், தனது டிஜிட்டல் வாலட்டில் உள்ள கிரிப்டோ சொத்துக்களில் ஒரு பகுதி, தனக்குத் தெரியாமலும், ஒப்புதல் இல்லாமலும் மாற்றப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.
பேரக் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்வி ஜைனல் அபிதீனின் கூற்றுப்படி, இந்தப் பரிவர்த்தனையானது பிளாக்செயின் (blockchain) நெட்வொர்க் வழியாகக் கிரிப்டோ சொத்துக்களைப் பரிமாற்றம் செய்வதை உள்ளடக்கியது
கிரிப்டோ சொத்துகள் வைத்திருந்த ஒருவரின் டிஜிட்டல் வாலெட்டில் (Digital Wallet) அனுமதியின்றி நுழைந்து, அவரது கிரிப்டோ சொத்துகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், அந்த நபர் சுமார் ரிம 12.47 மில்லியன் (1 கோடியே 24 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்) இழந்துள்ளார்.
பேராக் மாநில காவல்துறைத் தலைவர் அல்வி ஸைனல் அபிடின் கூறுகையில், 38 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர், நேற்று பிற்பகல் தெலுக் இந்தானில் இருந்தபோது இந்தச் சம்பவத்தைக் கண்டறிந்ததாகத் தெரிவித்தார்.
தனது அறிவுக்கும் அனுமதிக்கும் இன்றி, தனது டிஜிட்டல் வாலெட்டிலிருந்து குறிப்பிட்ட அளவிலான கிரிப்டோ சொத்துகள் வேறொரு முகவரிக்கு மாற்றப்பட்டிருப்பதை அவர் உணர்ந்ததாகக் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், பிளாக்செயின் (Blockchain) வலையமைப்பின் மூலம் கிரிப்டோ சொத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
“இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணவும், பரிவர்த்தனைகளின் பணப்பாதையைக் கண்டறியவும் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக புக்கிட் அமானின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின் கிரிப்டோ பிரிவின் உதவியும் பெறப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது. இப்பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒன்று முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் இணையவழி மோசடிகள் மற்றும் பிஷிங் (Phishing) தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அல்வி அறிவுறுத்தினார்.
மேலும், சந்தேகத்திற்குரிய இணைப்புகளைச் சொடுக்குவதைத் தவிர்க்க வேண்டும், தங்களது டிஜிட்டல் வாலெட்டில் நடைபெறும் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும், கணக்கு ஊடுருவப்பட்டதாகச் சந்தேகித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்துடன் டிஜிட்டல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.






















