உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, இன்னும் எவ்வளவு காலம் உங்களுக்கு வேண்டும்? மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமையாக இருப்பது?மேலும் 50 ஆண்டுகளுக்கு?”
ஹிஷாமுடின்: மக்கள் சீரமைப்புகளுக்காகக் காத்திருக்கத் தயார்
ஒய்எப்: மலேசியர்கள் சீரமைப்புக்காகக் காத்திருக்கிறார்களா? உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் அவர்களே, ‘பெரும்பாலோர்’ என்று தாங்கள் குறிப்பிட்டது சிறுபான்மை அம்னோ திருடர்களையா அல்லது பெர்சேயை ஆதரிக்கும் பெரும்பான்மை மக்களையா?
மக்களுடன் உங்களுக்கிருந்த தொடர்பு அறுந்துபோய்விட்டதுபோல் தெரிகிறது. இதுவே, அம்னோ இப்போது மக்களைப் பிரதிநிதிக்கவில்லை என்பதற்குத் தெளிவான அறிகுறியாகும்.எனவே, இனியும் அது ஆட்சியில் இருக்கக்கூடாது.
நம்பாதவன்: உள்துறை அமைச்சர் அவர்களே, அரசாங்கம் சீரமைப்புகளைச் செயல்படுத்தும்வரை மக்களில் பெரும்பாலோர் காத்திருக்கத் தயாராக உள்ளனர் என்று நீங்களே கற்பிதம் செய்துகொள்கிறீர்கள்.
நான் என்ன நினைக்கிறேன் என்றால், அரசாங்கம்-நீதித்துறை உள்ளிட்டு- பல விசயங்களில் சட்டென்று முடிவெடுக்காமல் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘அல்லாஹ்’ விவகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உயர்நீதிமன்றம் கத்தோலிக்க வார ஏடான த ஹெரால்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. எப்போது? 2009-இல்.இப்போது 2012. அவ்விவகாரத்தை நீதிமன்றங்கள் இன்னமும் ஊறப் போட்டு வைத்துள்ளன.
இதில் உள்துறை அமைச்சுக்கு சம்பந்தமில்லை என்கிறீர்களா? மக்களை மடையர்கள் என்று நினைக்காதீர்கள்.
சுவைபெண்டர்: சீரமைப்புச் செய்ய அம்னோ-பிஎன்னுக்கு 54 ஆண்டுகளைக் கொடுத்தோம். சீரமைப்புகளைச் செய்யாமல் அம்னோவும் பிஎன்னும் பிரித்தாளும் கொள்கையை ஒரு நுண்கலையாக வார்த்தெடுத்திருக்கிறார்கள்.நீங்களும் உங்கள் அல்லக்கைகளும் நாட்டின் வளத்தை விரயமாக்குகிறீர்கள், கொள்ளையடிக்கிறீர்கள்.போதுமய்யா, போதும்.
விழிப்பானவன்: இன்னும் எவ்வளவு காலம் உங்களுக்கு வேண்டும்? மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமையாக இருப்பது? மேலும் 50 ஆண்டுகளுக்கு?
விஜயன்: ஏன், 55 ஆண்டுகள் போதாதா?
முதல் அவசரகாலம் 1960-இல் முடிந்து 52 ஆண்டுகள் ஆகின்றன. மலாயாக் கம்முனிஸ்டு கட்சியுடம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி 23 ஆண்டுகள் ஆகின்றன. சிவில் உரிமைகளை நிலைநிறுத்த இவ்வளவு காலம் போதாதா?
எது எப்படியோ, காத்திருந்து காத்திருந்து மக்கள் பொறுமை இழந்து விட்டார்கள். இப்போது 13வது பொதுத் தேர்தலுக்காகக் காத்திருக்கிறோம்.அதில், எந்த அரசு, அரசமைப்புப்படியான உரிமைகளை எங்களுக்கு விரிவாகவும் முழுமையாகவும் திருப்பிக் கொடுக்குமோ அதற்கு வாக்களிப்போம்.
டோஃபி: காத்திருங்கள் என்பதெல்லாம், அடுத்த தேர்தலில் வெல்வதற்கான ஒரு தந்திரம். நீங்கள் நினைப்பதுபோல் நாங்கள் மடையர்கள் அல்லர். நீங்கள் உங்கள் பெயரில் ‘உசேன்’ என்றிருப்பதை விட்டுவிடுவது நல்லது. அப்பெயர் நேர்மையின் அடையாளமாக விளங்கியது. நீங்கள் அதைக் காப்பாற்றவில்லை.
முவாக்: “மக்கள் சீரமைப்புகளுக்காகக் காத்திருக்கத் தயாராம்”- ஹிஷாம் கூறுகிறார். சாமானியர்கள் நினைப்பதைக் கண்டறிந்தவர்போல் அல்லவா பேசுகிறார்.
மக்கள் சீரமைப்பு இப்போதே வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிறகல்ல. சீரமைப்புகளை மேற்கொள்ளும் திறன் அம்னோ-பிஎன்னுக்கு இல்லை என்பது தெளிவு. அதனால், இவர்களை புத்ராஜெயாவைவிட்டு விரட்டுவதுதான் ஒரே வழி.
கேஎஸ்என்: உண்மைதான். ஒரு ‘புதிய’ அரசு வந்து சீரமைப்புகள் செய்வதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.அவர்களுக்குத் தெரியும் அம்னோ ஆட்சியில் உள்ளவரை நாட்டுக்கு உருப்படியான சீரமைப்பு வராது என்பது.
அந்த வகையில் நீங்கள் சொன்னது உண்மைதான் ஹிஷாம் அவர்களே. அதுவரை நாங்கள் காத்திருப்போம்.