உங்கள் கருத்து: “அமைச்சர்களுக்கும் அவர்களுடைய துணைவியர்/ துணைவர்களுக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அது ‘ஆபத்து ‘ ஆகும். காரணம் அவர்கள் எவ்வளவு செல்வத்தைச் சேர்த்துள்ளனர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பர்.”
அமைச்சர்களுடைய சொத்துக்களை பகிரங்கமாக அறிவிப்பது ‘ஆபத்தாக’ முடியலாம்!
சக மலேசியன்: அந்த நஸ்ரி அப்துல் அஜிஸ் சர்ச்சைகளை தோற்றுவிக்க தவறுவதே இல்லை. அமைச்சர்களுடைய சொத்துக்கள் அறிவிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை அவர் விவேகமாக கவலை தெரிவித்துள்ளார்.
சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்னும் முறையில் அவர் பொறுப்பேற்க வேண்டிய, வெளிப்படையாக இருக்க வேண்டிய கடமைகளிலிருந்து நழுவுகிறார். அவரது கருத்துக்கள் உண்மையில் ஆத்திரத்தை மூட்டுகின்றன. அவர் எச்சரிக்கப்பட்டு கண்டிக்கப்பட வேண்டும்.
இல்லை என்றால் தங்களது சொத்துக்களை அறிவிக்கும் ஜப்பானிய ஜெர்மானிய இத்தாலிய அமைச்சர்களை முட்டாளாக்கி விடும்.
குழப்பம் இல்லாதவன்: நஸ்ரி, இந்த நாட்டுக்கும் நீங்கள் ஒர் அவமானச் சின்னம். நீங்கள் பதவியில் இருக்க தகுதியற்றவர்.
அரசாங்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சொத்துக்களை வெளியிடுவதின் நோக்கம் அரசாங்கம் வெளிப்படையாக இயங்குவதைக் காட்டுவதற்காகும்.
அவர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க மறுப்பது அவர்கள் எதையோ மறைக்க விரும்புகின்றனர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
எங்களை முட்டாள்களாக நடத்த வேண்டாம். நீங்கள் மறுப்பதற்கான காரணம் எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
வெள்ளை முடி: நஸ்ரி இப்போது இரண்டு விஷயங்களை கோடி காட்டியுள்ளார். அவற்றை இப்போது பிஎன் செய்து கொண்டிருக்கிறது.
1) அமைச்சர் ஒருவர் நடப்பு சம்பளத்தில் எந்த அளவுக்குச் சொத்து சேர்க்க முடியும்? அவர்களிடம் உள்ள எந்த அளவு சொத்துக்கள் நமக்கு வியப்பை ஏற்படுத்தும்?
2) அவர்களை போலீஸ் ஆபத்திலிருந்து காப்பாற்ற முடியாதா? அது முடியும் என்றால் ஆபத்து இல்லை. போலீஸ் அதனைச் செய்யா விட்டால் சரியான போலீஸ் படையை அரசாங்கம் உருவாக்கத் தவறி விட்டது எனப் பொருள்படும்.
செரி பன்: நஸ்ரி அவர்களே, தங்களது சொத்துக்களை அறிவித்த பினாங்கு முதலமைச்சரும் ஆட்சி மன்ற உறுப்பினர்களும் இப்போது ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் எனக் கூற வருகின்றீர்களா?
மாச்சா97: ஆமாம். தங்கள் சொத்துக்களை அறிவிப்பது அவர்களுக்கு ஆபத்தாக முடியலாம். காரணம் அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்.
அர்மெகடோன்: எல்லா அமைச்சர்களும் பில்லியனர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் அவர்கள் தங்கள் சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்க மறுக்கின்றனர். அவர்கள் வருமான வரியையும் கூட கட்டாமல் இருக்க வேண்டும்.
ஜெரார்ட் சாமுவேல் விஜயன்: அமைச்சர்களுக்கும் அவர்களுடைய துணைவியர்/ துணைவர்களுக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அது ‘ஆபத்து ‘ ஆகும். காரணம் அவர்கள் தங்கள் சொற்ப சம்பளத்தைக் கொண்டு எவ்வளவு செல்வத்தை, அதிகாரத்தை, சலுகைகளைச் சேர்த்துள்ளனர் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பர்
அவர்களுடைய வாழ்க்கை நடைமுறைகளைப் பராமரிப்பதற்கு அவர்களுடைய “அதிகாரத்துவ” சம்பளமும் மற்ற சகாயங்களும் மட்டும் போதாது. அம்னோ/பிஎன் ஆட்சியாளர்கள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க மறுப்பதை பக்காத்தான் ராக்யாட் எல்லா செராமாக்களிலும் குறிப்பாக மலாய் கிராமப்புறங்களில் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூற வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளில் அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ள பொறுப்பற்ற அறிக்கை இதுவாகும். பிரதமரிடம் அறிவிப்பது மட்டும் போதாது. அது திருடர்கள் தங்கள் தலைவனிடம் சொல்வதற்கு ஒப்பாகும். மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் ஏன் பொது மக்களைக் கண்டு அஞ்சுகின்றீர்கள்?