அரசு ஊழியர்களின் பிப்ரவரி சம்பளமும் எஸ்எஸ்எம் அடிப்படையில் தான் இருக்கும்

அரசாங்க ஊழியர்களுக்கான பிப்ரவரி மாதச் சம்பளம் நடப்பில் உள்ள எஸ்எஸ்எம் (SSM) சம்பள முறையின் அடிப்படையில் தான் வழங்கப்படும். SBPA என்னும் புதிய சம்பள முறையின் கீழ் சம்பளத்தை மறு ஆய்வுக்கு பின்னரே வழங்குவது என அரசாங்கம் முடிவு செய்துள்ளதே அதற்குக் காரணம் என நிதி அமைச்சு கூறியது.

SSM, SBPA முறைகளுக்கு இடையிலான ஜனவரி மாத சம்பள வேறுபாடு, புதிய சம்பளத் திட்டத்துக்கு ஒப்புக் கொண்ட ஊழியர்களுக்கு ஜனவரி 31ம் தேதி கொடுக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் அது ஜனவரி 9ம் தேதி அறிவிக்கப்பட்டதைப் போல அமலாக்க முடியாது என்றும் நிதி அமைச்சு அறிக்கை தெரிவித்தது.

SBPA சம்பள முறை மறு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்ட சம்பளம் கொடுக்கப்படும். என்றாலும் SBPA சம்பள முறையின் அமலாக்கம் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியாக இருக்கும்,” என அது குறிப்பிட்டது.

கியூபாக்ஸ் எனப்படும் பொது, சிவில் சேவை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இனங்கவும் அந்த முடிவு செய்யப்பட்டதாகவும் நிதி அமைச்சு கூறியது.

SBPA சம்பள முறையை மறு ஆய்வு செய்து மேம்படுத்துவதற்கான பொறுப்பு  முன்னாள் பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் இஸ்மாயில் தலைமையிலான சிறப்புக் குழுவுக்கு மூன்று மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார்.

பெர்னாமா