NGO: தைப்பூசத்தின் போது மதுபான விற்பனைக்குத் தடை விதியுங்கள்

வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத்தின் போது மதுபான விற்பனைக்குத் தடை விதிக்குமாறு அதிகாரிளை பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் பல அரசு சாரா அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தைப்பூசத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடந்த சில ஆண்டுகளாக காவடிகளும் ரதமும் செல்லும் பாதையில் மதுபானங்களை உணவு விடுதிகளும் கடைகளும் விற்பனை  செய்து வந்ததாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி அதிகாரி என்வி சுப்பராவ் கூறினார்.

“தைப்பூசம் சமயத் திருவிழா ஆகும். அத்தகைய மதுபான விற்பனை பதற்றத்தை ஏற்படுத்துவதோடு பக்தர்களுக்கும் தொந்தரவைத் தருகிறது. அதே வேளையில் தைப்பூசத் திருவிழாவுக்கும் அவமானத்தைக் கொண்டு வருகிறது,” என ஜார்ஜ் டவுனில் இன்று அவர் நிருபர்களிடம் கூறினார்.

இதனிடையே தைப்பூசம் கொண்டாடப்படும் இடங்களைச் சுற்றிலும் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளை தடுப்பதின் மூலம் சுங்கத்துறையும் தனது பங்கை ஆற்ற வேண்டும் என இதனிடையே மலேசிய இந்து சங்க ஜார்ஜ் டவுன் கிளைத் தலைவர் வி பழனிசாமி கேட்டுக்  கொண்டுள்ளார்.

பெர்னாமா