பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டில் பழனிவேல் பேச்சு!

மலேசிய தமிழர் தன்மான இயக்கத்தின் ஏற்பாட்டில் அம்னோ தலைவர் நஜிப் ரசாக்கையும், அவரது ஒரே மலேசியா கொள்கையின் சின்னமான  1 -யையும்   முன்நிறுத்தி திராவிட பெருந்தலைவர் பெரியார் ஈவேரா அவர்களின் பகுத்தறிவு சிந்தனை இன்பம் பருக நேற்றிரவு கோலாலம்பூர், ஜாலான் கிள்ளான் லாமாவிலுள்ள பெர்ல் இண்டர்நேசனல் தங்கும்விடுதியில் “பன்னாட்டு பகுத்தறிவு மாநாடு 2012” துவக்க விழா கண்டது.

மாலை 7 மணியளவில் நிகழ்வு ஆரம்பமாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக துவக்கயிருந்த மஇகா தலைவர் பழனிவேல் சுமார் 1 மணி 45 நிமிடங்கள் தாமதமாக வருகை தந்ததால் இரவு மணி 8. 45 அளவிலேயே பன்னாட்டு பகுத்தறிவு மாநாடு ஆரம்பமானது.

தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறப்பு வருகையாளர்களின் உரை இடம்பெற்றதுடன் பாடல், நடனம் என பல்வகை அங்கங்கள் அரங்கேறின. மாநாடு துவக்க விழாவான நேற்று உள்நுழைவு இலசம் என அறிவிக்கப்பட்டிருந்ததால் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நேற்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் பன்னாட்டு பகுத்தறிவு மாநாட்டின் இன்றைய அங்கங்த்தில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் பேராளர்களின் சொற்பொழிவுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பன்னாட்டு மாநாட்டில் மஇகா தலைவர் பழனிவேல் ஆற்றிய உரையை பார்வையிட காணொளி இணைப்பை அழுத்தவும்.

காணொளி| 3.49 mins

 

TAGS: