“50 ஆண்டு கால ‘நம்பிக்கை’ போதாதா?”

“நஜிப் அவர்களே நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் எம்ஆர்எஸ்எம் என்ற மாரா கீழ் நிலை அறிவியல் கல்லூரிகளை தோட்டங்களைச் சேர்ந்த ஏழை இந்தியர்களுக்கும் புதுக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை சீனர்களுக்கும் திறந்து விடுங்கள்.

இந்துக்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என்கிறார் நஜிப்

ஜனநாயகவாதி53: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் மலேசிய இந்தியர்கள் அம்னோ/பிஎன் மீது நம்பிக்கை வைத்து விட்டனர். இதை விட உங்களுக்கு என்ன வேண்டும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே.

இந்தியர்களுக்கு உதவி தேவைப்படும் என அம்னோ நினைக்கவே இல்லை. அப்படி அது எண்ணியிருந்தால் புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அதற்கு அடுத்த திட்டங்கள் மூலம் இந்தியர்களுக்கு உதவிகள் கிடைத்திருக்கும்.

பிஎன்பி என்ற Permodalan Nasional Berhad, ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் வாங்கிய தோட்டங்களிலிருந்து ஏழை இந்தியர்கள் விரட்டப்பட்டனர். அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இந்தியர்கள் நிராகரிக்கப்பட்டதற்கு நிறைய சம்பவங்கள் உள்ளன. மிக அண்மைய சம்பவம் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் சம்பந்தப்பட்டதாகும். அதில் மக்களை வீடுகளிருந்து விரட்டுவதற்கு தனியார் வீடமைப்பாளர்கள் அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். அந்த நோக்கத்துக்காக நீதிமன்றங்களும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வரி செலுத்துவோரில் சீனர்கள் அதிகமாக இருக்கும் வேளையில் அரசாங்கக் கருவூலப் பணத்திலிருந்து நடத்தப்படும் எம்ஆர்எஸ்எம் என்ற மாரா கீழ் நிலை அறிவியல் கல்லூரிகளில் தோட்டங்களைச் சேர்ந்த ஏழை இந்தியர்களுக்கும் புதுக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை சீனர்களுக்கும் இடமில்லை.

சிலாங்கூரில் 5 விழுக்காடும் ஜோகூரில் 15 விழுக்காடும் வீடுகளை வாங்கும் பூமிபுத்ராக்களுக்குக் கழிவு கொடுக்கப்படுகிறது. அந்த கழிவு ஏற்படுத்தும் சுமையை யார் தாங்கிக் கொள்கிறார்கள்? வீடுகளை வாங்கும் சீனர்களும் இந்தியர்களும் தான். ஆகவே தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குகளுக்காக மீன் பிடிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

சூப்பர் ஸ்டார்: நஜிப் அவர்களே, நம்பிக்கை பிறக்க வேண்டுமானால் எம்ஆர்எஸ்எம் என்ற மாரா கீழ் நிலை அறிவியல் கல்லூரிகளை தோட்டங்களைச் சேர்ந்த ஏழை இந்தியர்களுக்கும் புதுக் கிராமங்களைச் சேர்ந்த ஏழை சீனர்களுக்கும் திறந்து விடுங்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த அவர்கள் நெடுங்காலம் உழைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அடுக்கு மாடி ஒன்றை வாங்கும் போது 5 விழுக்காடு கூட கழிவு கிடைப்பதில்லை.

அவர்களுடைய பிள்ளைகள் போராடுகின்றனர். டியூசன் வகுப்புக்கள் கூட இல்லாமல் யூபிஎஸ்ஆர் தேர்வில் நல்ல புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.  ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்கள் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு வெளியேறுகின்றனர்.

அவர்களை தங்கும் விடுதிகளைக் கொண்ட பள்ளிக்கூடங்களில் சேர்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களும் இந்த நாட்டு குடிமக்களே. “நம்பிக்கை”, என் காலடி!

பெர்ட்: இந்தியர்கள் கடந்த ஐந்து தசாப்தங்களாக அரசாங்கத்தை நம்பி வந்துள்ளனர்.அடஅனைக் காட்டுவதற்கு அவர்களிடம் என்ன இருக்கிறது? அவர்கள் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். பிஎன் தலைவர்கள் தங்களைக் கவனித்துக் கொள்வதிலும் தங்கள் கைப்பைகளை நிரப்புவதிலும்  மட்டுமே  அக்கறை கொண்டுள்ளனர். மஇகாவும் அப்படித்தான்.

இன்னும் 50 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் அரசாங்கத்தை நம்ப வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்களா?

பிட்புல்: நீங்கள் காலம் காலமாக பொய்களை கூறி வரும் வேளையில் என் மீது நம்பிக்கை வைக்குமாறு எங்களைக் கேட்டுக் கொள்ளும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது?

தியோ பெங் ஹாக் குடும்பத்துக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். மக்கள் வரிப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலேயே நீங்கள் கெட்டிக்காரர். நீங்கள் இதுவை ஒரு நல்லதைக் கூடச் செய்யவில்லை.

எப்போது 1Curi Malaysia வை தொடங்கப் போகின்றீர்கள்?

ஜெரால்டோ: பிரதமர் அவருடைய அமைச்சர்களில் ஒருவரான ஷாரிஸாட் அப்துல் ஜலிலைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. எப்படி அவர் மீது நம்பிக்கை வைப்பது?

மலேசிய இனம்:நஜிப் அவர்கள் முட்டாள்தனமாகப் பேசக் கூடாது. நம்பிக்கை வைக்குமாறு மக்களை நீங்கள் கேட்கக் கூடாது. நீங்கள் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற வேண்டும்.

பேப்பர்ரோஸ்: என்னை நம்புங்கள். வைரங்களையும், கைப்பைகளையும், ஆடைகளையும் வாங்குவதற்கு என் மனைவி உங்கள் பணத்தைச் செலவு செய்யவில்லை. அவை எங்கள் சொந்தப் பணத்தில் வாங்கப்பட்டவை.

TAGS: