கடன் திட்டம்:ஏன் இபிஎப் சந்தாதாரர்களிடம் ஆலோசனை கலக்கவில்லை?

“கடன் வாங்கியவர் கடனைச் செலுத்தாபிட்டால்,  ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பு?நானா? என் பணம் இந்த வகையில் பயன்படுத்தப்படுவது பற்றி என்னிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை? “

ராஜா நொங் சிக்கின் சவாலை பக்காத்தான் எம்பிகள் ஏற்றனர்

அப்2யு: கூட்டரசுப் பிரதேச, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் அவர்களே, வருமானம் குறைந்தவர்கள் வீடு வாங்க உதவுதல் என்பது நல்ல சிந்தனைதான்.ஆனால், அதற்கு ஊழியர் சேமநிதி(இபிஎப்)யில் உள்ள தொழிலாளர்களின் பணத்தைப் பயன்படுத்துவதுதான் சரியில்லை.

அரசாங்கம், கடன் உத்தரவாத கார்ப்பரேசன்(சிஜிசி), சிறிய, நடுத்தரத் தொழில் (எஸ்எம்இ)நிதி போன்று சிறப்பு நிதி ஒன்றை உருவாக்கி அதை நிர்வகிக்கும் பொறுப்பை வணிகப் பொருளகங்களிடம் ஒப்படைக்கலாம்.

பிஎன் அரசாங்கம் தொடங்கிய பல திட்டங்கள் நல்லவை, மக்களுக்குப் பயனானவை.  ஆனால், ஆட்சியாளர்களின் அல்லக்கைகள் தலையிட்டு அவை முறையாக செயல்படுத்தப்படுவதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்கள்.

விசுவாசமிக்க மலேசியன்: பக்காத்தான் எம்பிகளுக்குப் பாராட்டுகள். அரசாங்கம், இந்த மூன்று எம்பிகளிடத்திலும் இபிஎப் பணம் வீட்டுக் கடனுதவித் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படுவது சரிதான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த முடியுமானால் மக்கள் அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என்பது நிச்சயம்.

எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் அத்திட்டத்தை எதிர்க்கவில்லை.ஆனால்,  தொழிலாளர்களின் கடின உழைப்பில் உருவான இபிஎப் பணத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என்றுதான் அஞ்சுகிறோம்.கடந்தகால அனுபவங்கள் அப்படிக் கலங்க வைக்கின்றன.

கவனிப்பாளன்: இபிஎப் பணம் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது.அதை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து, தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும்போது ஒரு கணிசமான தொகையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.இதுதான் அந்நிதி தொடங்கப்பட்டதன் நோக்கம். அந்தப் பணத்தை எடுத்து, திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம் என்ற நிலையில் உள்ளவர்களுக்குக் கடனாகக் கொடுப்பது ஆபத்தாக முடியலாம்.

அம்னோ மக்களின் பணத்தைத் திருடுவதை நிறுத்தினால் நாட்டில் இத்தனை ஏழைகள் இருக்க மாட்டார்கள். 2008 தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை, பிஎன் திருடர்களாலும் அவர்களின் அல்லக்கைகளாலும் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரிம28பில்லியன் என்று மதிப்பிடுகிறது.

2011வரை திருடுபோன பணத்தையும் சேர்த்தால் களவுபோன மொத்தத் தொகை ரிம50-இலிருந்து ரிம60 பில்லியன் இருக்கலாம்.

கிட் பி: வருமானம் குறைந்தவர்கள் வீடு வாங்க உதவ வேண்டும் என்பது சமூக உணர்வுடன் கூடிய நல்ல நோக்கம்தான்.

ஆனால், இபிஎப் சந்தாதாரர்கள் ஓய்வுக்காலத்துக்காக சேமித்துவைக்கும் இந்தப் பணத்தை அதற்குப் பயன்படுத்தக் கூடாது.

வீரா: அம்னோவில் உள்ள பணக்காரர்கள் இபிஎப் சந்தா செலுத்துவதில்லை போலும். அதனால்தான் இபிஎப் பணம் அரசியல் நோக்கங்களுக்காக தவறான முறையில் முதலீடு செய்யப்படுவது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

பெயரிலி: வங்கிகளில் கடன்பெறத் தகுதியற்றவர்கள், வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படலாம்.

அதில் ஒன்றும் ஆபத்தில்லை.கொடுக்கும் கடனைவிட சொத்துக்களின் மதிப்பு இரு மடங்கு, மும்மடங்காக உயர்ந்திருக்கும் என்று பிரதமரும் நொங் சிக்கும் கூறுகின்றனர்.கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால், நிஜ வாழ்க்கையில் அப்படியெல்லாம் நடப்பதில்லை.

கடன் செலுத்தாத ஒருவரை, அவரின் மனைவி, குழந்தைகளுடன் விட்டைவிட்டு வெளியேற்றப் பாருங்கள்.முடிகிற காரியமா அது.நெஞ்சை உலுக்கி விடாதா? ஒருவேளை இந்த ஏழை மக்கள் தெருவில் போய்ப் படுக்கட்டும், நமக்கென்ன என்று நினைக்கிறார்களோ, என்னவோ.

பய்யுன்செங்: கடன் வாங்கியவர் கடனைச் செலுத்தாபிட்டால்,  ஏற்படும் இழப்புக்கு யார் பொறுப்பு?நானா? என் பணம் இந்த வகையில் பயன்படுத்தப்படுவது பற்றி என்னிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை?

எம்ஏசிசியின் இறுதிக் கட்ட விசாரணையில் ஷாரிசாட் விசாரிக்கப்படலாம்

எக்காளமுழக்கம்: நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் விசாரணை முடிவுகளை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இதில், ஒளிவுமறைவு கூடாது.ஒவ்வொரு விசயத்தையும் நுணுகி ஆராய வேண்டும்.

விசாரணை உயர்ந்த தரத்தில் நடைபெற வேண்டும்.அதில் ஏதாவது குறைந்தால், சமரசம் செய்துகொள்ளப்படுவதாகவும் அரசியல் தில்லுமுள்ளு நிகழ்வதாகவும்தான் அர்த்தம் செய்துகொள்ளப்படும்.யார் அதை ஏற்றுக்கொண்டாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். தங்கள் அதிகாரத்தை வாக்களிப்பின்போது வெளிப்படுத்துவார்கள்.

செர்ரி பன்: இப்படி நடக்கலாம்: தம்மை நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்ட முயன்றால், அம்னோவின் மற்ற ஊழல்களை அம்பலப்படுத்தப்போவதாக ஷாரிசாட் அப்துல் ஜலில் சட்டத்துறை தலைவரை(ஏஜி) மிரட்டலாம்.

அதன் விளைவாக, ஏஜி ஒரு வலுவற்ற குற்றச்சாட்டை அவர்மீது சுமத்தி வழக்கு தொடுக்கலாம்.

நீதிமன்றம், “போதுமான ஆதாரங்கள் இல்லை” என்று தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்யலாம்.அதன்பின் என்ன. ஷாரிசாட்டும் குடும்பத்தாரும் தண்டனையிலிருந்து தப்பி ஆடம்பர வாழ்க்கையைத் தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

கேஜென்: ஆமாம், ஆமாம் விசாரிப்பார்கள்.ஷரிசாட்டுக்கு ‘தே தாரிக்’யும்  கரி பஃவ்’ -வும் கொடுத்து குசலம் விசாரிப்பார்கள்.

TAGS: