“பிகேஆர் அலுவலகம் கொளுத்தப்படும் என்ற மிரட்டல்கள், இப்போது கார்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன.இத்தனை நடந்தும் போலீசார் கண்டுக்கொள்வதே இல்லை.”
செம்ப்ரோங் தாக்குதல் குறித்து அன்வார் கலங்கவில்லை
கர்மா: யாரோ எதிர்வரும் பொதுத் தேர்தல் களத்தை இரத்தக்களரியாக்க முயல்கிறார்கள். பிகேஆர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி அதைத் தீவைத்து கொளுத்தப்போவதாக மருட்டுகிறார்கள்; பினாங்கிலே இன்னொரு ஆர்ப்பாட்டம் அதனால் மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது;இப்போது கார்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன.
ஆனால், போலீசார் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் மற்ற தரப்பு பதிலடி கொடுக்கத் தொடங்கினால் போலீஸ்மீதுதான் குறை சொல்லப்படும்.
புத்ரா ஜெயாவை எவ்வகையிலும் காக்க வேண்டும் எனப் பிரதமர் என்று தம் ஆதரவாளர்களுக்கு அறைகூவல் விடுத்தாரோ அன்று தொடங்கியது இது.ஒரு பிரதமர் இப்படியா பேசுவது?
பெண்டர்: பிரதமர் நஜிப் ரசாக் அல்லது அவரின் துணைவியாரின் கார்மீது கல்லெறியப்பட்டால் அல்லது அன்வாரின் காரை உதைத்ததுபோல் உதைத்தால் என்ன நடக்கும்?
நஜிப்பின் ஹெலிகாப்டர் பற்றி நக்கலடித்த மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மாணவர் என்ன பாடுபட்டார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
விளையாட்டுத்தனமாக சொல்லப்பட்ட கருத்துக்காக அவர்மீது போலீசார் பாய்ந்தனர்.
ஆனால், இங்கோ உயிருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது.சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் மெளனம் காக்கிறார்கள்.
இப்படிப்பட்ட குண்டர்த்தனம் அமைதியைக் குலைப்பதை எண்ணி போலீசார் கவலைகொள்ளவில்லையா? மலாய் இளைஞர்கள் இவ்வளவு மரியாதைக்குறைவாய் நடந்துகொள்வதை நினைத்து பெர்காசா கவலைப்பட வேண்டாமா?
பெர்மாத்தா திட்டத்துடன் தொடர்புள்ள ரோஸ்மா, மலாய் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட இந்நிகழ்வு பற்றி கவலை கொள்ளவில்லையா?
முக்ரிஸ்: மலேசிய நிறுவனங்கள் இஸ்ரேலுடன் வணிகம் செய்வதில் தப்பில்லை
ஜிரோனிமோ: இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வணிகம் செய்யலாம்.ஆனால், தூதரக உறவுகள் கூடாது-என்ன நியாயம் ஐயா, இது?
அப்படியானால் நான் இஸ்ரேல் போகலாம்.இஸ்ரேலியர்கள் இங்கு வரலாம். இது சுற்றுலா சம்பந்தப்பட்டது. அரசாங்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை.
அலேன் கோ: முக்ரிஸ் அவர்களே, மலேசிய நிறுவனங்கள் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்கிறபோது மலேசிய கிறிஸ்துவர்கள் இஸ்ரேல் செல்ல ஏன் அனுமதிக்கப்படுவதில்லை? முஸ்லிம்களுக்கு மெக்காவும் மதினாவும் புனித நிலங்கள் என்பதுபோல் கிறிஸ்துவர்களுக்கு இஸ்ரேல் ஒரு புனித பூமி. உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினிடம் சொல்லித் தடையை நீக்கச் செய்வீர்களானால் மலேசிய கிறிஸ்துவர்கள் உங்களுக்கு நன்றி சொல்வார்கள்.
முகைதின்: இப்படி வர்த்தகம் நடப்பதை நீங்களும் உங்கள் தந்தையும் மலேசியர்களுக்கு தெரிவிக்காதது ஏன்?
யூதர்களைத் தாக்கிப் பேசும்போது மட்டும் உங்கள் தந்தையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. கபடத்தனத்தின் உச்சக்கட்டம்.
வீரா: உங்கள் கட்சி டெல் அவிவ் ஆட்சிக்கு எதிரானது. ஆனாலும், வர்த்தகத்தின்வழி அதற்கு நீங்கள் வலுவூட்டி வருகிறீர்கள். இது என்ன நியாயம்?
உங்களைப்போலவே உலகமும் காமன்வெல்த் நாடுகளும் நினைத்திருந்தால் இயன் ஸ்மித் இன்னமும் ரொடீசியாவை ஆண்டுகொண்டிருப்பார், நெல்சன் மண்டேலா இன்னமும் சிறையில் வாடிக்கொண்டிருப்பார்.