பெர்ஜெயா கார்ப்பரேசன் பெர்ஹாட்(பி-கார்ப்), அதன் நிறுவனரும் நிறுவனத்தில் அதிக பங்குகள் வைத்திருப்பருமான வின்சண்ட் டான் சீ இஅவுன், பணி ஓய்வு பெற முடிவு செய்துள்ளார் என்று அறிவித்துள்ளது.
டான், கடந்த ஆண்டு ஜனவரியிலேயே தலைமை செயல் அதிகாரியாக தம் மூத்த புதல்வர் ரோபின் டான் இயோங் சிங்கை நியமனம் செய்து விட்டு பி-கார்ப் தலைவராக மட்டும் இருந்து வந்தார்.இப்போது அப்பதவியையும் விட்டுவிட்டார்.
“இயக்குனர் வாரியம் தலைவர் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை அடையாளம் காணும். இடைக்காலத்துக்கு ரோபினே பி-கார்ப் தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்”, என அந்நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
-பெர்னாமா