கடந்த மார்ச் 5 ஆம் தேதி தினக்குரல் தமிழ் நாளேட்டில், எதிர்வரும் பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி சிலாங்கூரில் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 3 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என மனித உரிமை கட்சியின் பொதுச்செயலாளர் உதயகுமார் கூறியிருப்பதாக வெளிவந்த செய்தி, அவருடைய தனிப்பட்டே கருத்தே தவிர ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் கருத்து
அதுவல்ல என்கிறார் ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தி.
கடந்த மார்ச் 3ஆம் தேதி சிங்கப்பூரில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேசிய, மாநில ஒருங்கினைப்பளர்கள் மற்றும் சுமார் 80 முக்கிய ஆதரவாளர்களுடன் நடைபெற்ற 4 மணி நேர ஆலோசனை கூட்டத்தின் போது பொது தேர்தல் சம்பந்தமாக எவ்விதமான இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மையாகும் என்றும் வேதமூர்த்தி கூறினார்.
ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் அணைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட சந்திப்பில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் ஆனால் பொதுதேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்று எவ்விதமான தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை என்று திரு. வேதமூர்த்தி தமது பத்திரிக்கை செய்தியில் தெளிவுபடுத்தினார்.
13-ஆவது பொது தேர்தலில் மனித உரிமை கட்சியோ அல்லது உதயகுமாரோ போட்டியிடுவது பற்றி தமக்கோ மற்ற ஹிண்ட்ராப் பொறுப்பாளர்களுக்கோ எவ்வித ஆட்சேபமும் இல்லை என்றும் அதே சமயத்தில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின் தேர்தல் நிலைப்பாடு குறித்து உதயகுமார் வெளியிடும்
கருத்துகளில தமக்கும் மற்ற ஹிண்ட்ராப் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் எவ்வித உடன்பாடும் கிடையாது என்று வேதமூர்த்தி மேலும் கூறினார்.