நஜிப் அன்பளிப்புக்களில் அம்னோ நிலைத்திருக்க முடியுமா?

“நாள் ஒன்றுக்கு 45 சென் -னுக்காக விவேகமான மலேசியர்கள் என அழைக்கப்படுகின்றவர்கள் ஊழல் மலிந்த பிஎன் -னுக்கு தங்கள் வாக்குகளைக் கொடுக்கப் போகின்றார்களா?”

500 ரிங்கிட் உதவி நஜிப் செல்வாக்கை உயர்த்தியுள்ளது

வெறும் பேச்சு: அண்மைய என் எப் சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன- மாடுகள்-ஆடம்பர  அடுக்கு மாடி வீடுகள்- 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனைப் போன்று அம்னோ பிஎன் தலைவர்கள்  நூற்றுக்கணக்கான மில்லியன் ரிங்கிட்டை உறிஞ்சும் வேளையில் உண்மையில் மக்களுக்குச் சொந்தமான அந்த 500 ரிங்கிட்டுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உங்கள் வாக்குகளை வாங்க முடியும் என  மலேசியர்கள் எண்ணுவது நல்லதல்ல.

நாட்டின் மொத்தக் கடன் 455 பில்லியன் ரிங்கிட்டாக பெருகியுள்ள வேளையில் மலேசியர்கள் அவ்வளவு  குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டிருந்து, வழங்கப்படும் கடலைக் காசை மட்டும் பார்த்தால் நமது நாட்டின் எதிர்காலத்துக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.

அம்னோ போடும் பிச்சையில் மலேசியர்கள் ஏமாறக் கூடாது. பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்.  ஆனால் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களியுங்கள். அவ்வாறு செய்யத் தவறினால் நமது நாடு  கிரீஸுடன் சேர்ந்து கொள்ளும். 2019ம் ஆண்டுக்கு முன்னதாக திவாலாகி விடும்.

நோபிஎண்ட்: சிலருக்கு வழங்கப்பட்ட 500 ரிங்கிட் அன்பளிப்பால் நஜிப் செல்வாக்கு உயர்ந்துள்ளது  என்ற அந்த ஆய்வு முடிவுகள் உண்மை என்றால் பரிதாபத்துக்குரிய விசயம்தான். காரணம்  மலேசியர்கள் அவ்வளவு மலிவானவர்களா ? அவர்கள் உலகில் மிகவும் முட்டாள்களாக இருக்க  வேண்டும்.

நஜிப் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகாரத்தில் இருக்கிறார். அந்த 500 ரிங்கிட் ஆண்டுக்கு 167  ரிங்கிட் ஆகிறது அல்லது நாள் ஒன்றுக்கு 45 சென் ஆகும்

அந்த வெறும் 45 சென் -னுக்காக விவேகமான மலேசியர்கள் என அழைக்கப்படுகின்றவர்கள் ஊழல் மலிந்த பிஎன் -னுக்கு தங்கள் வாக்குகளைக் கொடுக்கப் போகின்றார்களா?

தாய்லெக்: வரி செலுத்தும் மக்களுக்குச் சொந்தமான பணத்தை வாரி வழங்குவதின் மூலம் எந்த முட்டாளும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முடியும். வாக்குகளுக்காக மக்கள் வரிப் பணத்தைப்  பயன்படுத்தும் பிரதமர் வெட்கப்பட வேண்டும். அவர் அவ்வளவு தாராளமானவராக இருந்தால் அவர் தமது சொந்தப் பணத்தை அல்லது அம்னோ பணத்தை பயன்படுத்த வேண்டும். என் பணத்தை அல்ல.

மூன்றாம் சக்தி: மலேசியாகினி வாசகர்களிடையே “சீ சீ இந்தப் பழம் புளிக்கும், ஒன்றும் செய்ய  முடியாத நிலையும்” காணப்படுகின்றது.

நஜிப் களத்தில் உள்ள மனிதர். அதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய செல்வாக்கு கிடைத்துள்ளது.  அவர் தெளிவாக ஆய்வு செய்து தமது பலவீனமான தொடர்புகளைச் சரி செய்து வருகிறார். அவர் கடுமையாக உழைக்கிறார். அவர் மக்கள் பணத்தை மக்களிடமே ரொக்கமாகத் திருப்பிக் கொடுக்கிறார்.

ஆம். அவரும் அவரது கும்பலும் பில்லியன் கணக்கில் அங்கும் இங்கு சுருட்டியிருக்கலாம். ஆனால்  நஜிப் தமது தோற்றத்தை உயர்த்திக் கொள்ளும் போராட்டத்தில் வெற்றி பெறுகிறார். பெரும்பாலான  இந்தியர்கள் அவரை பாராட்டத் தொடங்கி விட்டனர். சீனர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் பக்கம்  சாய்கின்றனர்.

புத்ரா ஜெயா தோட்டத்தின் நறு மலர்களின் வாசத்தைச் சுவாசிக்க வேண்டுமானால் பக்காத்தான் இன்னும் நிறையச் செய்ய வேண்டும். அம்னோ செய்த தவறுகள், மோசடிகள், இனவாதம், தில்லுமுல்லு,  மாடுகள் ஆகியவற்றை மட்டும் அது நம்பியிருக்கக் கூடாது.

ஜிஎச்கோக்: மெர்தேக்கா மய்யம் மேற்கொண்ட ஆய்வின் படி நஜிப் தமது செல்வாக்கு பெருகியிருப்பதால் தமது பெக்கான் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவார். ஆனால் அரசாங்கத்தின் மீது “அதிருப்தி ” நிலவுவதால் பிஎன் பொதுத் தேர்தலில் தோல்வி காணும்.

அதனால் அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நஜிப் எதிர்த்தரப்புத் தலைவராக இருப்பார்.

TAGS: