முதுநிலை என்எப்சி அதிகாரி மீது இன்று குற்றம் சாட்டப்படலாம்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் முதுநிலை அதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தகவலைத் தெரிவித்த ஒரு வட்டாரம், குற்றச்சாட்டுக்களில் பெரும் பணம் சம்பந்தபட்டுள்ளதாக கூறியது. அந்த வழக்கு தற்போது கிரிமினல் நீதிமன்ற பதிவகத்தில் பதிவு செய்யப்படுகிறது.

தன்னிறைவு பெறும் நோக்கத்துடன் அமைக்கப்பட்ட என்எப்சி-க்கு அரசாங்கம்

நாட்டின் மாட்டிறைச்சி தேவையில் தவழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனை தவறாகப் பயன்படுத்தியதாக அதன் மீது குறை கூறப்பட்டுள்ளது.

பங்சார், புத்ராஜெயா, சிங்கப்பூர் ஆகியவற்றில் சொத்துக்களை வாங்குவதற்கு அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

என்எப்சி-யின் தலைவர் மகளிர் குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் கணவர் முகமட் சாலே இஸ்மாயில் ஆவார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அதன் இயக்குநர்களாக உள்ளனர்.

இதனிடையே என் எப் சி ஊழல் மீது நெருக்குதல் அதிகரித்ததால் ஏப்ரல் 8ம் தேதி தாம் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாக நேற்று ஷாரிஸாட் அறிவித்தார். அவருடைய மேலவை உறுப்பினர் பதவிக்கான தவணைக் காலம் ஏப்ரல் 9ம் தேதி முடிவுக்கு வருகிறது.

TAGS: