பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வியின் திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்தது எனக் கூறிக் கொள்வதற்கான ஆதாரத்தை கோத்தா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான் டாஹ்லான் நிராகரித்துள்ளார்.
பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் வழங்கியுள்ள Banquet event order (BEO) என்ற ஆவணம் அந்த விருந்துக்கு பொது நிதிகள் பயன்படுத்தப்பட்டதாக கருதப்பட முடியாது என அந்த பிஎன் எம்பி சொன்னார்.
“அவர்கள் அந்த ஆவணத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு பில் என்பதற்கு அந்த பில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது எனப் பொருள்படும். பிரதமர் அலுவலகம் அந்த பில்லுக்குப் பணம் செலுத்தியது என்றும் அர்த்தமல்ல. பிரதமர் அலுவலகம் எங்குள்ளது ? பிரதமர் அலுவலகத்தில் உள்ளது.”
எடுத்துக்காட்டுக்கு நான் கார் ஒன்றை கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். எங்கு பில்லை அனுப்புவது என அவர்கள் வினவுகின்றனர். என் சேவை மய்யத்துக்கு அனுப்புமாறு நான் அவர்களிடம் சொல்கிறேன்.”
“என் சேவை மய்யம் அதற்கு பணம் செலுத்துகிறது எனப் பொருள்படுமா ? என் அலுவலகம் அங்கு உள்ளது,” என ரஹ்மான் நேற்றிரவு பிஎம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட விளக்கமளிப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
ரஹ்மான் அந்த விவகாரம் மீது கிட்டத்தட்ட பல மணி நேரம் டிவிட்டர் மூலம் வாதம் நடத்தியுள்ளார்.
தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க நஜிப் ஆதாரத்தைச் சமர்பிக்க வேண்டும் என ராபிஸி கோருவதையும் ரஹ்மான் சாடினார்.
“ஒருவர் இன்னொருவர் மீது குற்றம் சாட்டுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும் என்னும் நிலை உலகில் எங்காவது நிகழ்ந்தது உண்டா ?”என ரஹ்மான் வினவினார்.
ராபிஸி ஜிங்கா 13 என்ற அரசு சாரா அமைப்பின் வழி அந்த ஆவணத்தைக் கொண்டு எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை வேண்டுமென்றே தவறாக வழி நடத்தியதாக கண்டு பிடிக்கப்பட்டால் எம்ஏசிசி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் 100,000 ரிங்கிட் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றும் ரஹ்மான் குறிப்பிட்டார்.