அந்தப் பணத்தை பின் தொடர்ந்து செல்லுங்கள் உண்மை வெளியாகும்

“ஷாங்ரிலா ஹோட்டலில் பரிவர்த்தனைகள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த ஆதாரத்தைக் காட்டுங்கள். அத்துடன் எல்லாம் முடிந்தது.”

திருமண நிச்சயதார்த்த விருந்துக்குப் பிரதமர் பணம் கொடுத்தார்

சரவாக் டயாக்: நல்லது. அந்த பில்லுக்குப் பணம் கட்டியது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகும். பிரதமர் அலுவலகம் அல்ல. அந்தப் பணம் செலுத்தப்பட்டதற்கு வழங்கப்பட்ட அதிகாரத்துவ ரசீதை இப்போது அந்த ஹோட்டல் காட்ட முடியுமா?

நஜிப் அந்தப் பணத்தைக் காசோலை வழியாக செலுத்தியிருக்க வேண்டும். அதனால் அந்த ஹோட்டல் தனது வங்கிக் கணக்கறிக்கையைக் காட்ட முடியுமா?

அந்தக் காசோலையின் பிரதியை வங்கி காட்டலாமே? அதே வேளையில் நஜிப்பும் தமது வங்கி கொடுத்த கணக்கறிக்கையை வெளியிட வேண்டும். வங்கியில் உள்ள தமது கணக்கு மூலம் அவர் பணத்தை செலுத்தியது அதன் மூலம் தெரிய வரும்.

சார்பாசால்: அரசாங்கம் வழங்கும் சம்பளம் மட்டுமே நமது பிரதமருக்கு உள்ள ஒரே வருமானம். அமைச்சர் என்ற முறையில் அவர் எந்த வர்த்தகத்திலும் ஈடுபட முடியாது. நஜிப் இளம் வயது முதல் அமைச்சராக இருந்து வருகிறார். மலேசியாவில் தமக்கு எந்தத் தொழிலும் இல்லை என அவரது மனைவி கூறியுள்ளார்.

அதனால் அவருக்கு எப்படி அதிகச் செலவு பிடிக்கும் ஆடம்பர வாழ்க்கையை நடத்த முடியும்? திருமண நிச்சயதார்த்த விருந்து ஒன்றுக்கு 400,000 ரிங்கிட்டுக்கும் மேல் செலவா?

பீரங்கி: கிட்டத்தட்ட அரை மில்லியன் ரிங்கிட்.  பிரதமரால் அந்தச் செலவைத் தாங்க முடியுமா? பிரதமருடைய மாதச் சம்பளம் எவ்வளவு?

அவரது சம்பளம் மாதம் ஒன்றுக்கு 50,000 ரிங்கிட்டாக இருந்தாலும் அந்தத் தொகையை அவர் கட்ட முடியுமா என்பது கேள்விக் குறியே. இன்னும் நிறையக் கேள்விகள் உள்ளன.

மலேசியா சக்கிட்: அந்த நிகழ்வுக்கு அரசாங்கம் பணம் கொடுப்பதற்கு நோக்கம் கொண்டிருந்தது என்பதைக் காட்டுவதற்கு அதற்குப் பிரதமர் அலுவலக வழங்கிய உத்தரவாதத்தைக் கொண்ட நிகழ்வு அளிப்பாணை மட்டும் போதும்.

அது தனிப்பட்ட நிகழ்வாக இருந்தால் நஜிப், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவரை நியமித்து தமது பெயரில் நிகழ்வை நடத்துமாறு கூறியிருக்க வேண்டும். அவர் பிரதமர் அலுவலக வளங்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது.

நஜிப் பில்லுக்கான பணத்தைச் செலுத்தியிருந்தாலும் முழு விவகாரமும் அதிகார அத்துமீறலைக் காட்டுகிறது. பிரதமர் அலுவலகம் மக்களுக்குச் சேவை செய்வதற்கே தவிர தமது தனிப்பட்ட தேவைகளுக்கு அல்ல என்பதை நஜிப் தெளிவுபடுத்த வேண்டும்.

இரண்டு காசு: பணம் செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட காசோலையைக் காட்டுவது அவ்வளவு சிரமமா ? பிரதமரைத் தவிர மற்ற எல்லோரும் ஏன் முன் வருகின்றனர்?

காசோலையை அல்லது வங்கிக் கணக்கைக் காட்டுங்கள். வெறும் வர்த்தைகளுக்கு மதிப்பில்லை. வெறும் மறுப்பு யாரையும் நம்ப வைக்காது.

விளையாட்டு: நஜிப் சான்றிதழ் பெற்ற கணக்காயர். ஷாங்ரிலா ஹோட்டலிடமிருந்து என்ன கேட்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

ஹோட்டல் விடுத்த மறுப்பறிக்கை முழுமையானது அல்ல. அது காசோலையின் முன் பக்கத்தையும் பின்பக்கத்தையும் பணம் செலுத்தப்பட்டதற்கான அதிகாரத்துவ ரசீதையும் வெளியிட வேண்டும். அந்தப் பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் தேவை.

அதன் வழி கணக்குத் தணிக்கையை முழுமையாக மேற்கொள்ள இயலும். பணம் எப்படி செலுத்தப்பட்டது என்ற உண்மையும் வெளி வரும்.

விஜய்47: ஷாங்ரிலா, பிரதமரும் நஜிப் ரசாக்கும் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த இடத்தில் என் தலை சுற்றுகிறது. அந்தப் பில்லுக்கான பணத்தை பிரதமர் செலுத்தினார் என்றால் அவர் தமது அதிகாரத்துவ தகுதியில் அந்தப் பணத்தைச் செலுத்தினார் எனப் பொருள்படும்.

திருமணம் நிச்சயிக்கப்படும் பெண்ணுடைய தந்தை அந்தப் பணத்தைக் கட்டினார் என்றால் அது நஜிப் ரசாக்கினால் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதில் எது சரி?

ஜோக்கர்: அந்த அறிக்கை தாமதமாக வந்துள்ளது. முழுமையாகவும் இல்லை. நான் ஹோட்டல் உரிமையாளராக இருந்தால் குற்றச்சாட்டு எழுந்தவுடன் பிரதமருடைய பெயரைக் காப்பாற்ற நான் நடவடிக்கை எடுத்திருப்பேன்.

உங்களுடைய செல்வாக்கு மிக்க மிகப் பெரிய வாடிக்கையாளர் ஒருவரைக் காப்பாற்ற நீங்கள் ஏன் இவ்வளவு நாட்கள் காத்திருந்தீர்கள் ?

குவிக்னோபாண்ட்: மக்கள் வரிப் பணம் ஏதும் இழக்கப்படவில்லை என்றாலும் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள் ஏன் அந்த ஏற்பாட்டில் சம்பந்தப்படுகின்றனர்? அவர்கள் அரசாங்கம் தொடர்பான வேலைகளில் மட்டுமே தானே செய்ய வேண்டும்? இது வேலை நெறிமுறைகள் சம்பந்தப்பட்டதாகும்.

TAGS: