வெள்ளை ஷரிசாட்டையும் குடும்பத்தையும் காப்பாற்றாது

உங்கள் கருத்து: “அம்னோவில் பலரும் கட்சி தங்களைப்  பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள். ஏனென்றால், கட்சித் தலைவர்களில்  பலர் அவர்களைப் போல, சிலர் அவர்களைவிடவும் மோசமான தப்புகளைச் செய்தவர்கள்தானே.”

என்எப்சி தலைவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார்

டாக்: ‘கவ்கேட்’ வழக்கு இப்படித்தான் இருக்கும்.முகம்மட் சாலே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாரா. ஆம், நிறுத்தப்பட்டார். இனி. வழக்கு பல  ஆண்டுகளுக்கு இழுத்துக்கொண்டே போகும்.

காலம் செல்லச் செல்ல, அன்றைய அம்னோ ஊழல்கள்மீது கவனம் திரும்ப இந்த வழக்கை மக்கள் மறந்து போய்விடுவார்கள். சாலேயும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவார்.

மாற்றத்தின்முகவர்: ஏன் தந்தை மட்டுமே குற்றம் சாட்டப்பட்டார்? வாங்கப்பட்ட சொத்துகளின்  கூட்டு உரிமையாளர்கள் எனப் பிள்ளைகளின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர்கள்மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும்தானே. 

விஜார்ஜ்மை:களங்கப்பட்ட நீதித்துறையில் தனித்து நிற்பவர் எஸ்.எம்.கோமதி சுப்பையா. ஆனால், வழக்கு முடியும்வரை அவர் அங்கு இருக்க மாட்டார்.

நியாயவான்: கோமதி சுப்பையாவை வாங்க முடியாது.சாலேக்குக் குறைந்த பிணைப்பணம் நிர்ணயிக்கப்படுவதைக்கூட அவர் ஏற்கவில்லை.

பெரிய தொகை, அதுவும் மக்களின் வரிப்பணம், சம்பந்தப்பட்ட வழக்கு இது. என்னைக் கேட்டால், ரிம500,000 பிணைகூட குறைவான தொகைதான்.

என்எப்சி நிதியைத் தவறாகப் பயன்படுத்திய சாலேக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் கடும் தண்டனை கொடுக்க வேண்டும். அபராதத்துடன் விடுவித்தல் என்பது கூடாது.

சமூகம்: மகனா, ரிம500,000பிணைப்பணம் கட்டினார்?அந்தப் பணம் எங்கிருந்து வந்தது? அதுவும் என்எப்சி பணமா? அப்படியானால், ஆண்டுக்கூட்டத்தின் ஒப்புதல் பெறாமல் இன்னொரு குற்றமும் இழைக்கப்பட்டிருக்கிறது.

அப்படியெல்லாம் இல்லை என்றால் அப்பணம் எங்கிருந்து வந்தது என்று யாராவது விசாரியுங்களேன்.

பிலோம்: அரசுதரப்பு வழக்குரைஞர் ரிம50,000பிணைக்கு ஒப்புக்கொண்டதை நினைத்து கடுப்பாகிப் போனேன். நல்ல வேளையாக, நேர்மையாக சிந்திக்கும் நீதிபதி ஒருவர் இருக்கிறார்.

அம்னோவில் பலரும் கட்சி தங்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள்.ஏனென்றால் அவர்களின் சகாக்களும் தலைவர்களில் பலரும் அவர்களைப் போலவே அல்லது அவர்களை விடவும் மோசமான தப்புகளைச் செய்தவர்கள்தானே.

அபாசிர்:இந்த நாடகம் எப்படி நடக்கப்போகிறது என்பதற்கு தெளிவான குறிப்புக் காண்பிக்கப்பட்டு விட்டது. “அரசுதரப்பு வழக்குரைஞர் பிணையாகக் குறிப்பிடப்பட்ட தொகைக்கு உடன்பட்டார்” என்பதுதான் அந்தக் குறிப்பு.

அல்டான்துயா கொலைவழக்கில் அரசுதரப்பு,  எதிர்த்தரப்பு, நீதிபதி எல்லாரும் சேர்ந்து முன்னரே தீர்மானிக்கப்பட்ட பாதையில் வழக்கை நடத்திச் சென்றார்களே, அதுபோல் இதுவும் ஒரு நாடகமாக நடந்து முடியப் போகிறது.

அவ்வழக்கிலும் முதலில் விசாரணை செய்த நீதிபதி மாற்றப்பட்டார். அதேபோல் கோமதியும் விரைவில் மாற்றப்பட்டு வேறொருவர்  அவரிடத்தில் வந்தமர்வார்.

கெஜென்: சாலேமீது ஊழல் குற்றம் சுமத்தப்படவில்லை. என்எப்சியின் ஆண்டுக்கூட்டத்தின் அனுமதி பெறாமல் அதன் பணத்தைப் பயன்படுத்தினார் என்றுதான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

எளிதில் மீண்டு வரும் வகையில் அக்குற்றச்சாட்டு அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட கொள்முதல்களுக்கு வாரியம் ஒப்புதல் தந்தது எனப் பின்தேதியிடப்பட்ட கூட்டக் குறிப்புகளைக் காண்பித்தால் போதும் சாலே வெளியில் வந்து விடுவார்.

வெறுப்புற்றவன்: எல்லாமே தேர்தலுக்குமுன் நடக்கும் கண்துடைப்பு வேலையாகத்தான் எனக்குப் படுகிறது.தேர்தல் முடிந்ததும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றோ ஏதாவுது நுட்பக் காரணங்களைக் காண்பித்தோ குற்றச்சாட்டுகள் கைவிடப்படும்.

அப்படியே குற்றம் நிகழ்ந்திருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டாலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அது தள்ளுபடி செய்யப்படும். இதுதானே நடந்துகொண்டிருக்கிறது.

TAGS: