கட்சித்தாவல் ஓர் அருவருக்கத்தக்கச் செயல்

“தவளைகள் அவர்கள் பிஎன் ஆள்களோ பக்காத்தான் ஆள்களோ, அவர்கள் யார் தங்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்களோ அந்த மக்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதால் அவர்களை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.”

 

விக்கிலீக்ஸ்: செப்டம்பர் 16 என்று அன்வார் கூறியதில் உண்மை உண்டு

பெயரிலி_4031: 2008 செப்டம்பர் 16, வந்து போய்விட்டது. எதுவும் நடக்கவில்லை.

அப்துல்லா அஹமட் படாவி பிரதமராக இருந்ததில் அதிருப்தி எம்பிகள் அதிருப்திகொள்ள பல காரணங்கள் இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் ஒன்றை நினைவில் கொள்வது முக்கியம்: எம்பி-ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் அவர் பிஎன்னைச் சேர்ந்தவரோ பக்காத்தானைச் சேர்ந்தவரோ எம்பியாகவே தொடர்ந்து இருத்தல் வேண்டும்.ஒரு எம்பி கட்சித் தாவுவது முறைகேடான செயல்.

அவர் நேர்மையானவராக இருந்தால் பதவியைத் துறந்து  மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிட்டு தம் செயலுக்கு வாக்காளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

பல இனவாதி: செப்டம்பர் 16-இல் எதிர்பார்க்கப்பட்ட கட்சித்தாவல் நடக்கவில்லை என்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அது நடந்திருந்தால் அன்வார் இப்ராகிம் பிரதமராகி இருப்பார். அதாவது தப்பான ஒரு செயலின்மூலம் பிரதமர் ஆகியிருப்பார்.அதன் பிறகு பக்காத்தான் உருப்படும் என்றா நினைக்கிறீர்கள். முதல் கோணல் முற்றிலும் கோணலாகத்தான் அமையும்.

அதன் பின்னர்,அன்வார்,அவரது திட்டம் அவருக்கு எதிராகவே வேலை செய்ததைக் கண்டாரா, இல்லையா. பேராக்கில் ஏழு பக்காத்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் பிஎன்னுக்குத் தாவினார்கள். அதனால் மாநில அரசு பிஎன் கைக்கு மாறியது.

அன்வாரின் செயல் சரியானதே என்றால் பேராக்கில் நடந்ததும் சரியானதே. ஆனால், மலேசியர்கள், குறிப்பாக பேராக்கியருக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள், தங்கள் மன உணர்வை விரைவில் வெளிப்படுத்தும் வாய்ப்பும் வந்தது. அவர்கள், அடுத்து நடந்த நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தலில் பதவி இறக்கப்பட்ட மந்திரி புசார் நிஜார் ஜமாலுடினைப் பெரிய அளவில் வெற்றிபெற வைத்தார்கள்.

இது பக்காத்தானுக்கு ஓர் எச்சரிக்கை. பிஎன்னைப்போல் நடந்துகொள்ள வேண்டாம்.

எண்ணம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கட்சிமாறுவதை என்னால் ஏற்க முடியாது.அதற்கு அவர்கள் வாக்காளர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

வாக்காளர்களின் முடிவுகளுக்கு பக்காத்தானாவது மதிப்பளிக்க வேண்டும்.

சிறியவன்: சாபா, சரவாக்கில் உள்ளவர்கள் பழைய சிந்தனைகளிலிருந்து இன்னும் மீளவில்லை. புரட்சிகரமான மாற்றங்களை அவர்களால் ஏற்க முடியவில்லை.

அன்வாருக்குப் பிரதமர் ஆவதில் மட்டும்தான் ஆசை என்று வாதிடுவது எடுபடாது. தெங்கு ரசாலி மட்டும் என்னவாம்? அவருக்குப் பிரதமராகும் ஆசை இல்லையா, என்ன?

அவர் மட்டும்தானா,பிரதமராகும் ஆசை உள்ளவர்கள் (முகைதின் யாசின், முக்ரிஸ் மகாதிர், கைரி ஜமாலுடின்) என்று நீண்ட பட்டியலே இருக்கிறது. முடிவில், மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ அவரே பிரதமர் ஆவார். 

ஆ ஹோ: தவளைகள் அவர்கள் பிஎன் ஆள்களோ பக்காத்தான் ஆள்களோ, அவர்கள் யார் தங்களைத் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்களோ அந்த மக்களை ஏமாற்றி விடுகிறார்கள் என்பதால் அவர்களை நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது. இந்தத் தவளைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டும் டாக்டர் மகாதிர் முகம்மட், அன்வார், அஸ்மின் அலி, நஜிப் போன்றோரைக் கண்டிக்க வேண்டும்.

நியாயவான்: கட்சித் தாவல் சட்டப்படி சரியானதே என்றாலும் அது  ஒரு நெறிகெட்ட செயல்.