நஜிப் ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூருக்குப் பயணம் மேற்கொள்வார்

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிலாங்கூருக்கு ஒரு நாள் அலுவல் பயணத்தை மேற்கொள்வார். அவர் மக்களுடைய ‘நாடித் துடிப்பை’ அறிந்து கொள்ளும் பொருட்டு அவர் பெட்டாலிங் ஜெயா, ஷா அலாம், பூச்சோங் ஆகியவற்றுக்குச் செல்வார்.

அந்த விவரங்களை சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் வெளியிட்டார்.

‘மக்களுடைய மனசாட்சி’ என்னும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அந்த பயணம் காலை 11 மணிக்கு பெட்டாலிங் ஜெயாவில் தொடங்கும் என்றார் அவர்.

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் டெம்ப்ளரில் அமைந்துள்ள விவேகானாந்தா தேசிய வகைத் தமிழ்த் தொடக்கப் பள்ளிக்கூடத்தில் நடைபெறும் ஸ்ரீ முருகன் கல்வி மய்யத்திம் 30வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பிரதமர் கலந்து கொள்வார். பல்வேறு சங்கங்கள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகியவற்றின் பேராளர்களையும் நஜிப் அங்கு சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிற்பகல் மணி 2.00 வாக்கில் நஜிப், செக்சன் 19ல் உள்ள ஹோட்டல் டி பால்மா-வில் சிலாங்கூர் மூத்த அரசாங்க ஊழியர்களுடனும் ஒய்வூதியக்காரர்களுடனும் கலந்துரையாடல் நடத்துவார் என்றும் முகமட் ஜின் விடுத்த அறிக்கை கூறியது.

பூச்சோங் புத்ரா பெர்டானாவில் ஸ்ரீ அந்தான் அடுக்கு மாடி வீட்டுப் பகுதியில் உள்ள Surau Al- Fatinahவில் பிரதமர் Asar தொழுகையில் கலந்து கொள்வதுடன் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல்கள், சூராவ்கள் ஆகியவற்றின் இமாம்களையும் குழு உறுப்பினர்களையும் சந்திப்பார்.

அடுத்து நஜிப் புத்ரா பெர்டானா தேசிய இடைநிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மக்களுடன் பிரதமர்’ என்னும் நிகழ்வில் பங்கு கொள்வார். 30,000 பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படும் அந்த நிகழ்வு மாலை மணி 6.30 வரை நடைபெறும்.

அந்த நிகழ்வின் போது பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கு மானியங்களையும் பிஎம்ஆர் தேர்வுகளில் நல்ல தேர்ச்சிகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்களையும் வழங்குவார்.

பெர்னாமா