தூய்மையான ஆளுமைக்கு கோரிக்கை விடுத்து சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா சாலைகளில் இரண்டு இடங்களிலிருந்து புறப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் ஊதா நிற உடைகளை அணிந்திருந்தனர்.
ஊதா நிற சட்டைகளையும் வெள்ளை நிற கையுறைகளையும் அணிந்திருந்த அவர்கள் பிற்பகல் 2 மணி வாக்கில் லேசாக மழை தூறிக் கொண்டிருந்த வேளையில் தாமான் ஜெயா ஏரி, செக்சன் 14ல் உள்ள துன் அப்துல் அஜிஸ் பள்ளிவாசல் ஆகிய இரண்டு இடங்களில் ஒன்று கூடினர்.
அவர்கள் “Hidup, hidup, hidup wanita; tolak, tolak, tolak, tolak rasuah” (மகளிர் வாழ்க, ஊழலை நிராகரியுங்கள்) ஆகிய சுலோகங்களை முழங்கினர். அவர்கள் பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதற்கும் ஊழலுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
என்றாலும் போலீசார் அந்த இரண்டு இடங்களிலும் 1,800 மட்டுமே கூடியதாகப் போலீஸ் மதிப்பிட்டது.