உங்கள் கருத்து: நம் நாட்டை குடியேறிகளிடம் விற்ற துரோகிகள்

வாக்குகளுக்காக ஆயிரக்கணக்கான பிலிப்பினோக்களும் இந்தோனிசியர்களும் சபாவில் குடிமக்களாகினர். இப்போது தீவகற்ப மலேசியாவிலும் அது தான் நடக்கிறது.

 

 

சபா சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் மீது அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படும் சாத்தியமில்லை.

வெறுப்படைந்தவன்: பிபிஎஸ், அப்கோ, பிபிஆர்எஸ் போன்ற அமைப்புக்களைச் சார்ந்த பைரின் கிட்டிங்கான், பெர்னார்ட் டொம்போக், மாக்ஸிமுஸ் ஒங்கிலி, ஜோசப் குருப் போன்றவர்களே சபாவை அம்னோவிடம் விற்று விட்டனர்.

அவர்கள் அம்னோவை ஆதரித்து- எம் திட்டத்தின் வழி சட்டவிரோத, சட்டப்பூர்வக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமை வழங்குவதிம் மூலம் முஸ்லிம் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதித்து விட்டனர்.

தாமிக்கா: வில்கிலீக்ஸ் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த தகவல் ஏற்கனவே வெறும் வதந்தி எனக் கருதப்பட்டது. ஆனால் இப்போது அது உண்மையெனத் தெரிகிறது. டாக்டர் மகாதீர் முகமட் தாம் பிரதமராக இருந்த வேளையில் மோசமான விதைகளை விதைத்து விட்டார். அவை இப்போது வேரூன்றி மரமாகி விட்டன. அவற்றை அழிப்பது சிரமமாகும்.

சுதந்திர மலேசியா: மலேசியாவுக்கும் அதன் மக்களுக்கும் (மலாய்க்காரர்களுக்கும் மலாய்க்காரர் அல்லாதாருக்கும்) துரோகம் செய்தவர் யார் என உங்களுக்குத் தெரிய வேண்டுமா ? அது அன்வார் இப்ராஹிம் அல்ல, மாட் சாபுவும் அல்ல. அது நமது முன்னாள பிரதமரைத் தவிர வேறு யாருமில்லை.

அடையாளம் இல்லாதவன்_4056: சபா சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் மீது அரச விசாரணை ஆணையமா ? அடக் கடவுளே இது சற்று அதிகமாகக் கோருவதற்கு இணையாகும்.

எம் திட்டம் மகாதீரின் பெரும் திட்டமாகும். அது ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பதாகும். உறுப்புக் கட்சிகள் என அழைக்கப்படும் கட்சிகளின் கேள்விக்குரிய விசுவாசம் மீது கவலைப்படவே வேண்டியதில்லை. அத்துடன் மலாய்க்காரர் அல்லாதார் வாக்குகளும் தேவை இல்லை.

எம் திட்டம் மூலம் அம்னோ பொதுத் தேர்தலில் கணிசமான வெற்றியை அம்னோ அடைந்து விடலாம். 13வது பொதுத் தேர்தல் நெருங்கும் போது அது மீண்டும் அமலாக்கப்படுகிறது. ஆனால் இப்போது தீவகற்ப மலேசியாவில்.

சுல்கெப்லி அகமட்: ஆகவே அது உண்மையே. வாக்குகளுக்காக ஆயிரக்கணக்கான  பிலிப்பினோக்களும் இந்தோனிசியர்களும் சபாவில் குடிமக்களாகினர். இப்போது தீவகற்ப மலேசியாவிலும் அது தான் நடக்கிறது.  மகாதீர் மலேசியாவுக்குப் பெரிய துரோகி.

அடையாளம் இல்லாதவன் இஸட்: 1990ம் ஆண்டுகள் தொடக்கம் நாம் செவிமடுத்து வரும் வதந்திகளை அது உண்மையாக்கியுள்ளது.

முதலாவதாக அந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்டு கூடிய வரை அதிகமான மக்களுக்குக் குறிப்பாக கிராமப்புற மக்களுக்கும் இணைய வசதிகள் இல்லாதவர்களுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். அதற்காக எல்லா வகையான விழிப்புணர்வுத் திட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக அந்த பெரிய துரோகியையும் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமையை வழங்கியதில் சம்பந்தப்பட்ட மற்றவர்களையும் என்ன செய்வது என்பது பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அவர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும்.

டிஒ190811: அந்த சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களினால் ஏற்படக் கூடிய நீண்ட கால விளைவுகள் பற்றி மலாய் கிராம மக்களுக்கும் சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் வசிக்கும் மக்களுக்கும் முழுமையாக விளக்கப்படுவது முக்கியமாகும். 

குடியேற்றக்காரர்களினால் எண்ணிக்கையில் பின்னுக்குத் தள்ளப்படுவதற்கு முன்பு தங்கள்  வாக்குச் சீட்டுக்களை விவேகமாக பயன்படுத்துமாறு அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும்.

அப்போது தான் மலேசியா, போட்டி அதிகரித்து வரும் உலகில் மலேசியா முன்னேற முடியும்.

அடையாளம் இல்லாதவன்_3e86: அத்தகைய சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களினால் ஏற்படக் கூடிய விளைவுகள் அந்த அரசியல்வாதிகளுக்குப் புரிவதே இல்லை. அது தொடருமானால் மக்கள் தொகையில் பெரும்பாலோர் தேர்ச்சி இல்லாத குடியேற்றக்காரர்களாக இருப்பார்கள். நமது பிள்ளைகள் வாழ்வு ஆதாரத்தைத் தேடி வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்து விடுவது நல்லது.

மெங்சியாங்: அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்காக அந்த அம்னோ அரசியல்வாதிகள் நாட்டையும் ஏன் தங்கள் ஆன்மாவையும் கூட விற்பதற்குத் தயாராக இருக்கின்றனர். சபாவும் சரவாக்கும் தீவகற்ப மலேசியாவுடன் இணையாமல் இருந்திருக்கலாம்.

இறைவன் அருள் பெற்ற நம் நாட்டை மகாதீர் விளையாடி விட்டார். நீங்கள் பாம்புடன் கை சேர்ந்திருந்தால் அதனால் கடிபடுவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

கேகன்: சபா மீது பிலிப்பீன்ஸ் இன்னும் கோரிக்கை வைத்துள்ளது அந்த அம்னோ முட்டாள்களுக்குத் தெரியாதா ? சபாவுக்குள் மில்லியன் கணக்கான பிலிப்பினோக்களை அனுமதித்து விட்டால் அது தான் விரும்பும் நேரத்தில் அந்தக் கோரிக்கையை முன் வைக்க முடியும்.

தாய்லெக்: மகாதீர் உண்மையான சபா மக்களுக்குத் துரோகம் செய்து விட்டார். இப்போது அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் சிறுபான்மையினர். என்றாலும் சபா தொடர்ந்து அம்னோவுக்கு வாக்களிக்கிறது. அதனால் உங்களுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.