கிளந்தான் அம்னோ தேர்தலுக்கு முழு அளவில் தயார்

கிளந்தான் மாநில அம்னோ தனது 14 தொகுதிகளின் தலைவர்களையும் அவர்களுடைய தொகுதிகளுக்கான தேர்தல் இயக்குநர்களாக நியமித்துள்ளது. அதனால் தேர்தல் நெருங்குகிறது என்னும் ஊகங்கள் வலுத்துள்ளன.

அந்த 14 இயக்குநர்களும் தங்கள் தொகுதிகளில் உள்ள மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் இயக்குநர்களை நியமிப்பார்கள் என கிளந்தான் அம்னோ தலைவர் முஸ்தாப்பா முகமட் கூறினார்.

எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் 13வது பொதுத் தேர்தலுக்கு முழு அளவில் ஆயத்தமாகும் வகையில் அந்த நியமனங்கள் செய்யப்படுவதாக அவர் சொன்னார்.

1990ம் ஆண்டு தொடக்கம் கிளந்தான், பாஸ் ஆட்சியில் முதலமைச்சர் நிக் அஜிஸ் நிக் மாட் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கி வருகிறது.

2004ம் ஆண்டு பிஎன் கிட்டத்தட்ட பாஸ் கட்சியை வீழ்த்தும் நிலையை எட்டி விட்டது. ஆனால் 2008ல் அது தலைகீழாக மாறி விட்டது.

தற்போது கிளந்தான் சட்டமன்றத்தில் பாஸ் கட்சிக்கு 38 இடங்கள் உள்ளன. ஆறு அம்னோவிடமும் ஒன்று பிகேஆர்-ரிடமும் உள்ளன.

இந்த நாட்டை ஆள்வதற்கு பிஎன்-னுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் 2013ம் ஆண்டு மத்தி வரையில் இருந்தாலும் திட்டிர் தேர்தலை பிரதமர் நஜிப் ரசாக் அறிவிக்கக் கூடும் என்பதை அண்மைய புத்ராஜெயா நடவடிக்கைகள் காட்டியுள்ளன.

TAGS: