இன்று பிற்பகல், மாற்றரசுக் கட்சியினர் மக்களவையிலிருந்து திடீரென்று வெளிநடப்புச் செய்தனர்.லைனாஸ் ஆலை மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி)வை அமைப்பது தொடர்பில் நடைபெற்ற விவாதத்தை அடுத்து இந்த வெளிநடப்பு நடைபெற்றது.
குவாந்தான், கெபெங்கில் அரிய மண் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதால் விளையக்கூடிய அபாயங்களை மூடிமறைக்கத்தான் பிஎஸ்சி அமைக்கப்படுவதாக அவர்கள் வாதிட்டனர்.
அந்த ஆலை பாதுக்காப்பானதல்ல என்று தெரிந்தாலும்கூட அதன் செயல்பாட்டைத் தடுத்து நிறுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு இல்லை என்பதால் அதன் நடவடிக்கைகளில் பங்கேற்காமல் அதைப் புறக்கணிப்பதாக பக்காத்தான் ரக்யாட் கூட்டணி கூறியது.
“அதில் பங்கேற்க ஆசைதான்.ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை…”, என்று பவுசியா சாலே(பிகேஆர்-குவாந்தான்) நாடாளுமன்ற வளாகத்தில் கூறினார்.
“அந்த ஆலை ஆபத்தானது என்று பிஎஸ்சி அறிவித்தாலும் பிஎன் நிர்வாகம் ஏதாவது தில்லுமுல்லு செய்து நிலைமையை வேறு மாதிரியாக மாற்றிக் காண்பிக்கும்”, என்றாரவர்.