நான் இன்னும் சிலாங்கூரில் போட்டியிட முடியும் என்கிறார் காலித்

சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம், தமது வாக்களிப்புத் தொகுதி சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயா செலத்தானிலிருந்து கோலாலம்பூரிலிருந்து லெம்பாய் பந்தாய் தொகுதிக்கு மாறியிருப்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் தாம் சிலாங்கூரில் போட்டியிட முடியாமல் போகலாம் என்ற ஆரூடங்களை நிராகரித்துள்ளார்.

அந்த விவகாரம் மீது முதன் முறையாக கருத்துரைத்த ஈஜோக் சட்ட மன்ற உறுப்பினருமான காலித், தமது மை கார்டில் முகவரி இன்னும் சிலாங்கூர், புக்கிட் ரோத்தானில் உள்ள கம்போங் பாசிர் துந்தோங்-காகத் தான் இருக்கிறது எனச் சொன்னார்.

“நான் ஈஜோக்-கில் போட்டியிடுவது குறித்த என்னுடைய நிலையைப் பொறுத்த வரையில் எந்தப் பிரச்னையும் இல்லை,” என சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்துக்கு பின்னர் இன்று பிற்பகல் நிருபர்களிடம் அவர் கூறினார்.

மை கார்டில் உள்ள முகவரி மாறினால் மட்டுமே அந்த இடம் பெயர்வு சாத்தியமாகும் என செபுத்தே அம்னோ தொகுதி இளைஞர் தலைவர் முகமட் ரஸ்லான் முகமட் ராபியி கூறினார்.

சிலாங்கூரில் காலித் போட்டியிடுவதிலிருந்து தகுதி இழக்கச் செய்வதற்காக செய்யப்பட்ட உள் சதியாகவும் அது இருக்கலாம் எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

என்றாலும் தொகுதி எல்லைகள் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து காலித்-தின் தொகுதி மாறியுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.

TAGS: