நாளை, ஹிண்ட்ராப் அமைப்பினர் ஐ.நா பணிமனையில் குறிப்பாணை வழங்குவர்

ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதி அனைத்துலக இனவாத எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. 1960-ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இனவெறி சட்டதிற்கெதிரான அமைதி ஊர்வலத்தின் போது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 69 பேர் பலியானதயொட்டி, இனவாத கொள்கைகளை  எதிர்த்து  அனைத்துலகச் சமூகம் பகிரங்கமாக குரல் கொடுக்கும் நோக்கில், 1966-ஆம் ஆண்டு முதல் அந்த துயர நாளை அனுசரிக்கும் தீர்மானத்தை (2142  (XX1) ) பொதுக்குழு அங்கீகரித்தது.

இன  பாகுபாட்டையும், சமய தீவிர போக்கையும்  ஹிண்ட்ராப் 2005-ஆம் ஆண்டு முதலே முன்னின்று எதிர்த்து வருகிறது. தென்னாபிரிக்காவில் இனவாதம் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால்  சட்ட அமைப்பு  பிரிவு  153  மலேசியாவில் இனவாதம் இன்றும் அமல்படுத்தப்பட்டு வேறுன்றி நிற்க வகை செய்கிறது  என்பதனை அனைத்துலகச் சமூகம் இன்னும் உணராமலிருக்கிறது.

ஆங்கிலேயர்களிடமிருந்து 1957-ல் நாடு சுதந்திரம் பெற்றபோது, சமூக மற்றும் பொருளாதார துறைகளில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த பெரும்பான்மை மலாய் சகோதரர்களுக்கு அனுகூலமாக   மலேசியச் சட்ட அமைப்பு பிரிவு 153  ஏற்படுத்தப்பட்டது. அதே  1957 ஆண்டில் மலாயாவில்  இந்திய சமூகத்தினரில் 95 விழுக்காட்டினர் குடியுரிமையற்றவர்களாகவும், நிலமற்றவர்களாகவும் அடிமைகள் போல் பிரிட்டிஷ்  முதலாளிகளையும் , சந்தர்ப்பவாதிகளையும் முழுதாக நம்பி வாழ்ந்து வந்தனர். அப்போதைய கூட்டணி அரசாங்கத்துடன்  பிரிட்டிஷாரும்  இணைந்து தற்காலிகமானதாக ஏற்படுத்தப்பட்ட இந்த சட்ட அமைப்பை நிரந்தரமாக்க துணை போனார்கள்.

55  ஆண்டுகளை கடந்து விட்ட சுதந்திர மலேசியாவில் இன்றும்  இந்த 153-ஆம்  சட்டப் பிரிவு மற்ற இனத்தவர்களின் அடிப்படை உரிமைகளை புறந்தள்ளிவிட்டு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக மட்டுமே கையாளப்பட்டு வருகிறது.

பொருள் பொதிந்த இந்நாளில் மலேசியாவிற்கு வருகை புரியவிருக்கும் ஐக்கிய நாட்டு மன்றத்தின் போது செயலாளர் திரு பான் கீ மூனிடம் , சட்ட அமைப்பில் நிலவும் இந்த பாகுபாட்டினை சுட்டிக்காட்ட ஹிண்ட்ராப் மக்கள் சக்தி எண்ணம் கொண்டுள்ளது. மலேசிய இந்தியர்கள் இந்த இன பாகுபாட்டு கொள்கையினால் தங்களுக்கு மிகவும் அவசியமான சமூக பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் மிகவும் பின் தங்கியுள்ளார்கள்.

மற்ற இன சமூகத்தினரும், குறிப்பாக பூர்வீகக் குடியினர்   இந்தச் சட்ட பிரிவால் பாதிகப்பட்டிருக்கிறார்கள் என்பதையும்  ஹிண்ட்ராப் உணர்கிறது. சுதந்திரமடைந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன பாகுபாட்டிற்கு  அடித்தளமமைக்கும் சட்டப் பிரிவு அகற்றப்பட்டு அணைத்து மலேசியர்களும் உழைப்பின் பலனை சரி நிகரான தன்மானத்துடன் அனுபவிக்க வகை செய்ய வேண்டும்.

“பாகுபாட்டை நிலைத்திருக்க தூண்டும் பொது கொள்கைகளையும்,தனிப்பட்ட மனப்போக்குகளையும்   அகற்றுவதே இனவாதத்துக்கு எதிரான போராட்டமாகும். அந்த ரீதியில் அரசாங்க தலைவர்களையும், அனைத்துலக மற்றும் அரசு சாரா அமைப்புகளையும்,  ஊடகவியலாளர்களையும், சமூக ஆர்வலர்களையும்,தனி மனிதர்களையும்  பொருள் பொதிந்த இந்த நாளில் எங்கெல்லாம் , எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் இனவாதத்திற்கு எதிராக செயல் படும்படி கேட்டுகொள்கிறேன்”   என்று ஐ நா போது செயலாளர் கடந்த 2011  ஆண்டிற்கான அனைத்துலக இனவாத எதிர்ப்பு நாள் செய்தியில்  கூறியிருந்தார்.

அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அர்த்தமுள்ள இந்நாளில் மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் ஐ.நா  பொது செயலாளரிடம், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி அமைப்பிலிருந்து நாங்கள்  அரசியல் அமைபிற்குட்ப்படுதப்பட்ட இன ரீதியிலான  கொள்கைகள்  குறித்த விவகாரத்தை  மலேசிய பிரதமரிடம் எழுப்ப வேண்டும்  என்னும் குறிப்பாணையை ஒப்படைக்கவிருக்கிறோம்.

அந்த குறிப்பாணை ஐ.நா பொது செயலாளரிடம், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் ஐ.நா பணிமனையில் எதிர்வரும் மார்ச் 21  ஆம்  தேதி , புதன்க்கிழமை மாலை 4 .00 மணிக்கு ஒப்படைக்கப்படும்.

இனவாதம் மற்றும் சமய   தீவிர போக்கை  முடிவுக்கு கொண்டு வர விரும்பும் அனைத்து மலேசியர்களையும், அரசு சார அமைப்புகளையும் எங்களோடு இணைந்து தங்களின் குறிப்பானைகளையும் ஒப்படைக்க  அழைக்கிறோம்.

தங்களின் குறிப்பானைகளில் தங்களின் பெயர் அல்லது இயக்கத்தின் பெயர், விலாசம், மலேசிய பிரதமரிடம் பொது செயலாளர் எழுப்ப வேண்டிய விவகாரம்  போன்ற தகவல்களுடன் , தங்களின் கையொப்பமிடப்பட்ட குறிப்பானையோடு WISMA  UN  , BLOCK  C  , DAMANSARA  OFFICES  COMPLEX, JALAN  DUNGU, DAMANSARA  HEIGHTS  , KUALA   LUMPUR  எனும் முகவரியில் மாலை 3 .45 க்குள்  வருகை தந்து  010  2774096 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

நன்றி
பொ.வேதமூர்த்தி
தலைமை
ஹிண்ட்ராப் மக்கள் சக்தி.

TAGS: