உண்மையே, நஜிப் வெறுப்பை உமிழ்வதற்கு உத்துசானுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளார்

“அதிகமான சுதந்திரம் என்பது சுதந்திரமான ஊடகங்கள் எனப் பொருள் அல்ல. ஊடகங்கள் உள்துறை அமைச்சின் கண்காணிப்புக்கு உட்பட்டிருக்கும் வரையில் சுதந்திரமான ஊடகங்களை நாம் பெறவே முடியாது.”

நஜிப்: நான் ஊடகங்களுக்கு கூடுதல் சுதந்திரம் கொடுத்தேன்

குவிக்னோபாண்ட்: பேச்சுச் சுதந்திரம் என்பது கூட்டரசு அரசாங்கம் மக்களுக்கு ‘கொடுக்கும்’ ஏதோ ஒன்று என எண்ணுவது தான் அம்னோ மரபணு போலும். இணையச் சுதந்திரம், முக்கிய ஊடகங்களுக்கு வழங்கப்படும் சுதந்திரமாக கருதப்படுகிறது.

நாளேடுகளின் வெளியீட்டாளர்களும் ஒலி, ஒளிபரப்பாளர்களும் அரசாங்கத்துடன் ஒத்துப் போகாவிட்டால் தங்களது அனுமதிகள் மீட்டுக் கொள்ளப்படும் என்ற அச்சத்தின் கீழ் வாழ்கின்றனர்.

அரசாங்கம் நமது பத்திரிக்கை சுதந்திரத்தை இன்னும் தாய்லாந்துடனும் பிலிப்பீன்ஸுடனும் ஒப்பிட்டு நோக்குவது தான் வேடிக்கையாக இருக்கிறது. பிரிட்டன் அல்லது அமெரிக்கவுடன் ஏன் ஒப்பிடக் கூடாது ? நாம் சிறந்த நிலையை அடைய வேண்டுமா அல்லது சராசரிக்குக் கீழ் இருக்க வேண்டுமா ?

சைமன் லீ 3ed5: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே நீங்கள் சொல்வது உண்மையே. நீங்கள் முக்கிய ஊடகங்களுக்கு குறிப்பாக உத்துசான் மலேசியாவுக்கு வெறுப்பை உமிழ்வதற்கும் இனப் பூசலைத் தூண்டுவதற்கும் முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளீர்கள்.

பெர்க்காசாவின் இப்ராஹிம் அலி, ஜாத்தியின் ஹசான் அலி போன்ற வெறியர்கள் இன வெறுப்பைத் துண்டுவதற்கும் சமய வெறுப்புணர்வை குறிப்பாக கிறிஸ்துவர்களுக்கு எதிராக தூண்டுவதற்கும் நீங்கள் முழுச் சுதந்திரம் கொடுத்துள்ளீர்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அம்னோ சேவகர்களுடைய குடும்பங்களுக்கு பில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள குத்தகைகளைக் கொடுத்து நாட்டின் கருவூலத்தை தொடர்ந்து கொள்ளையடிக்க ஊழல்வாதிகளுக்கு   உங்கள் தலைமைத்துவத்தின் கீழ் முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைப்பிலும் ஆதிக்கம் செலுத்தி அதனை சீரழிக்கும் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் மேலாதிக்கவாதிகளுக்கும் உங்கள் தலைமைத்துவத்தில் முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கேஎஸ்என்: நஜிப் அவர்களே ஊடகங்களுக்கு அதிக சுதந்திரம் கொடுத்ததாக நீங்கள் உங்களையே பாராட்டிக் கொள்வதற்குப் பதில் வெளியீடுகள் ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டும் எனக் கூறும் அச்சுக் கூட வெளியீட்டுச் சட்டத்தை ரத்துச் செய்யுங்கள்.

நீங்கள் அதனைச் செய்தால் உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ள வேண்டாம். நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து நீங்கள் ஊடகங்களை விடுவித்து விட்டதை மக்கள் உணர்ந்து கொள்வர். எது எப்படி இருந்தாலும் பத்திரிக்கை சுதந்திரம் மக்கள் உரிமை இல்லையா ?

எஸ்எம்சி77: அதிகமான சுதந்திரம் என்பது சுதந்திரமான ஊடகங்கள் எனப் பொருள் அல்ல. ஊடகங்கள் உள்துறை அமைச்சின் கண்காணிப்புக்கு உட்பட்டிருக்கும் வரையில் சுதந்திரமான ஊடகங்களை நாம் பெறவே முடியாது.

யம்: ஆம், உண்மை தான். நஜிப் கீழ் பத்திரிக்கைகளுக்கு கூடுதல் சுதந்திரம் கிடைத்துள்ளது. அதில் உத்துசான் மலேசியாவின் அவாங் செலாமாட் எழுதும் மூர்க்கத்தனமான உளறல்களும் அடங்கும்.

கறுப்பு வீரன்: மலேசியாகினிக்கும் மலேசியா இன்சைடருக்கும் விரிவான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறலாம். ஆனால் முக்கிய நாளேடுகளும் தொலைக்காட்சி நிலையங்களும் இன்னும் அரசாங்க கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

முக்கிய நாளேடுகள் எதிர்க்கட்சிகளுக்குத் திறக்கப்படாத வரையில் பத்திரிக்கைச் சுதந்திரம் பற்றிப் பேசுவதில் பொருள் இல்லை. அவர் அரசுக்குச் சாதகமான செய்திகளை மட்டுமே போடுகின்றன.

ஒஸ்கார் கிலோ: இணைய ஊடகங்கள் மட்டுமே சுயேச்சையாக இயங்குகின்றன. அச்சு ஊடகங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுகின்றன. வானொலியும் தொலைக்காட்சியும் அதை விட மோசம். ஆனால் அது அம்னோ வியூகத்துக்குத் தோதாக இருக்கிறது. காரணம் பெரும்பான்மையாக இருக்கும் கிராம மக்களை அது கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்க உதவுகிறது. அதே வேளையில் சிறுபான்மையாக உள்ள நகர மக்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

உடற்குறையுடையவன்: நஜிப் நீங்கள் பத்திரிக்கை சுதந்திரம் கொடுக்கின்றீர்கள். உங்கள் உறவினர் (ஹிஷாமுடின் ஹுசேன்) அதனை பிடுங்கிக் கொள்கிறார்.

TAGS: