அம்னோவிலிருந்து அடுத்து விலகுபவர் தெங்கு ரசாலியா?

“கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இதை எதிர்பார்த்தேன்.அம்னோ தலைவர்களில் சில நல்லவர்களும் உண்டு.அடுத்து தெங்கு ரசாலி வெளியேறுவதை எதிர்பார்க்கிறேன்.”

 

முன்னாள் அமைச்சர் காடிர் அம்னோவிலிருந்து விலகல்

உண்மைஒளி: அம்னோவிலிருந்து முன்னாள் அமைச்சரும் அதன் மூத்த தலைவர்களில் ஒருவருமான காடிர் ஷேக் ஃபாதிர் விலகியுள்ளார்.மாற்றம் என்னும் காற்று வீசியடிக்கிறது.அது ஊக்கம் தருகிறது. உற்சாகம் தருகிறது.

உங்களின் துணிச்சலான கெளரவமிக்க முடிவுக்குப் பாராட்டுகள்.

தைலெக்: 56ஆண்டுகாலம் உறுப்பினராக இருந்த கட்சியிலிருந்து விலகுகிறார் என்றால், அக்கட்சியில் ஏதோ பெரிய கோளாறு என்றுதான் பொருள். இனியும் அம்னோவில் இல்லை என்பதால் காடிர், அம்னோவின் வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவார் என்று நம்புவோம்..

டோஃபிஸ்டர்ன்.புளோக்ஸ்போட்: வாக்குகள் வாங்கப்பட்ட கதையை முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும்.என்ன நடந்தது என்பது நமக்குத் தெரிய வேண்டும்.

சகமலேசியன்: ஏன் கட்சி விலகினார் என்பதற்கு உண்மையான காரணத்தை அவர் விளக்க வேண்டும்.

பார்வையாளன்: அழுக்குப் பிடித்த அம்னோவிலிருந்து விலகும் உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுகள்.சுற்றுலா அமைச்சராக இருந்து நல்ல பணிகளைச் செய்துள்ளீர்கள்.

உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறேன்.கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இதை எதிர்பார்த்தேன்.அம்னோ தலைவர்களில் சில நல்லவர்களும் உண்டு.அடுத்து, தெங்கு ரசாலி வெளியேறுவதை எதிர்பார்க்கிறேன்.

நல்ல பையன்: மனத்தில் பட்டதைச் சொன்னார்.அம்னோவின் ஆதிக்கச் சக்திகளுக்கு அது பிடிக்கவில்லை.

அவரைக் குறை சொன்னார்கள்.குற்றவாளியாக்கப் பார்த்தார்கள்.அவர் என்ன செய்வார்?அதுதான் விலகி விட்டார்.

இனி,அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாதல்லவா? அம்னோ படகு வேகமாக கவிழ்ந்து வருவதை உணர்ந்துகொண்டார் காடிர்.அதனால் விரைந்து வெளியேறி விட்டார்.

முற்போக்காளன்:  சுற்றுலா தொழிலுக்குப் பெரும்பங்காற்றியவர் காடிர்.அதில் அவரது சாதனைகளையும் புதுமையான அணுகுமுறைகளையும் இன்றும் காணலாம். ‘மலேசியா உண்மையான ஆசியா’ என்ற சுலோகம் அதற்கோர் எடுத்துக்காட்டு.

ராஜா சோழன்: விவேகமான முடிவு.இம்முடிவுக்காக நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்பது நிச்சயம். எந்த வயதிலும் திருந்தலாம்.அதில் தப்பே இல்லை.

அம்னோ(பாரு), மகாதிருக்குமுன் இருந்ததுபோல் இப்போது இல்லை.அப்போதெல்லாம் அம்னோவை எல்லாரும் விரும்பினார்கள்.அதற்காக தங்களையே அர்ப்பணித்துக்கொண்டார்கள்.அம்னோ தலைவர்கள் மக்களின் நலன்விரும்பிகளாக இருந்தார்கள்.

இன்று, அம்னோ தலைவர்கள் என்போர், கட்சியைச் சுய-முன்னேற்றத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.மகாதிரின் கைங்கரியத்தால் பேராசை, உழல்,அதிகார அத்துமீறல் எல்லாமே கட்சிக்குள் வந்துவிட்டது.

விளையாட்டு வேண்டாம்: பக்காத்தான் ஆதரவாளர்களின் கபடத்தனம் மலேசியாகினி கருத்தரங்குகளில் பளிச்சென வெளிப்படுகிறது.

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை எதிர்க்கும் ‘மாமாக்களை’ அவர்கள் வெறுக்கிறார்கள்,தரக்குறைவாக பேசுகிறார்கள்.ஆனால்,அதே ‘மாமாக்கள்’ தங்கள் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்களாக இருந்தால் அரவணைத்துக் கொள்கிறார்கள்.

TAGS: